Honda அதன் இரண்டு எலெக்ட்ரிக் கார்களின் டீசரை வெளியிட்டுள்ளது,விரைவில் அறிமுகமாகும்.
2023 ஷாங்காய் மோட்டார் நிகழ்வில், ஹோண்டா நிறுவனம் இரண்டு எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது
புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் 'e:NS1' மற்றும் 'e:NP1' சீரிசை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட உள்ளன
ஹோண்டா மற்றும் GAC ஹோண்டா கூட்டணியில் 2021 அக்டோபர் வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டன.
2023 ஷாங்காய் மோட்டார் நிகழ்வில், ஹோண்டா நிறுவனம் இரண்டு எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவை 'e:N' சீரிசின் கீழ் விற்பனை செய்யப்பட உள்ளன. இவை ஹோண்டா நிறுவனம் சீன சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் தலைச்சிறந்த பத்து எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாகும்.
புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் 'e:NS1' மற்றும் 'e:NP1' சீரிசை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த மாடல்கள் டாங்ஃபெங் ஹோண்டா மற்றும் GAC ஹோண்டா கூட்டணியில் 2021 அக்டோபர் வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டன.
புதிய எலெக்ட்ரிக் மாடல்கள் சீன சந்தையில் முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்படுகின்றன. இதே போன்ற மாடல்கள் உலகின் மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இவற்றுடன் ஹோண்டா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை 'கனெக்ட் 4.0' கனெக்டெட் கார் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது.
தற்போது டீசரில் காணப்படும் இரு எலெக்ட்ரிக் கார் மாடல்களும் கிராஸ்ஒவர் எஸ்யுவி போன்று காட்சியளிக்கின்றன. எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமின்றி ஹைப்ரிட் எலெக்ட்ரிக் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் மாடல்களும் ஷாங்காய் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்படும் என ஹோண்டா அறிவித்துள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், ஷாங்காய் எக்ஸ்போவில் சென்சிங் 360 ADAS ஹார்டுவேருடன், ஹோண்டா அவர்களின் அடுத்த தலைமுறை ‘கனெக்ட் 4.0’ இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பத்தையும் காட்சிப்படுத்துகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile