Honda கம்பெனி 2024 N-Van EV எலக்ட்ரிக் காரை அறிவித்துள்ளது, இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 Km தூரம் வரை செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வரவிருக்கும் கார் 2018 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ICE வெர்சன் எலக்ட்ரிக் மாடலாகும். இது 134 அங்குல நீளம் கொண்ட வணிக வண்டி என்று கூறப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் வண்டியில் நான்கு பேர் அமரலாம்.
Gizmochina வின் கூற்றுப்படி, Honda ஜப்பானுக்கு 2024 N-van EV அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை 1 மில்லியன் யென் (சுமார் ரூ. 6.11 லட்சம்). இந்த எலக்ட்ரிக் வணிக வண்டி 2024 இல் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. புதிய EV வணிக அல்லது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக டிசைனிங் செய்யப்பட்டுள்ளது என்று Honda கூறுகிறது.
நாம் குறிப்பிட்டுள்ளபடி, புதிய எலக்ட்ரிக் வண்டி 2018 இல் அறிமுகப்படுத்தப்பட்ட N-van எலக்ட்ரிக் வெர்சன் ஆகும். தற்போதைய ICE மாடல் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு எஞ்சினைப் பெறுகிறது, இது அதிகபட்சமாக 64hp ஆற்றலையும் 104Nm உச்ச முறுக்குவிசையையும் உருவாக்கும் திறன் கொண்டது.
N-van EV உள்நாட்டு சந்தையில் 2024 ஆம் ஆண்டளவில் கிடைக்கும் அதே வேளையில், ஹோண்டா எலக்ட்ரிக் வண்டி வெளிநாட்டு சந்தைகளிலும் அறிமுகப்படுத்தப்படலாம் என்று அறிக்கை கூறுகிறது. எனினும், இது குறித்து ஹோண்டா தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
தற்போதைய நிலவரப்படி, 200 Km ரேஞ்ஜ் தவிர, இந்த எலக்ட்ரிக் வண்டியின் எந்த விவரக்குறிப்புகளையும் ஹோண்டா வெளியிடவில்லை.