புதிய ஹீரோ X பல்ஸ் 200 பைக் இந்திய வெளியீட்டு எப்போ தெரியுமா…!

Updated on 24-Aug-2018
HIGHLIGHTS

உங்களுக்கு இந்த புதிய ஹீரோ க்ஸ் Pulse பத்தி தெரியனுமா வாங்க பாக்கலாம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளான எக்ஸ் பல்ஸ் 200 மாடலை இந்தியாவில் வெளியிட இருக்கிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் இந்த மோட்டார்சைக்கிள் டிசம்பர் 2018-இல் வெளியிடப்படும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் எக்ஸ் பல்ஸ் 200 மாடல் மூன்று மாதங்கள் தாமதமாக அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. புதிய மாடல்களை வாங்குவோர் புத்தாண்டில் வாங்க விரும்புவர் என்பதால் இந்த முடிவை ஹீரோ மோட்டோகார்ப் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஹீரோ X பல்ஸ் 200 மாடல் அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த இம்பல்ஸ் 150 மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் ஆகும். ஹீரோ இம்பல்ஸ் 150 விற்பனை 2017-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அந்த வகையில் புதிய இம்பல்ஸ் 200 மாடலின் ஃபிரேம் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்கள் எக்ஸ்ட்ரீம் 200 மாடலில் உள்ளதை போன்றே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோ எக்ஸ் பல்ஸ் 200 முதன்முதலில் EICMA 2017 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஹீரோ எக்ஸ் பல்ஸ் மாடலில் எக்ஸ்ட்ரீம் 200 சிசி இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 18 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 17 என்.எம். டார்கியூ 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

ஹீரோ எக்ஸ் பல்ஸ் 200 மோட்டார்சைக்கிளின் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக், ஒரு சக்கரத்தில் சிங்கிள்-சேனல் ஏ.பி.எஸ். யூனிட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஸ்போக்டு வீல் கொண்டிருக்கும் எக்ஸ் பல்ஸ் 200 டியூப் கொண்ட டயர் வழங்கப்படுகிறது. டியூப்-லெஸ் டயர்களை கொண்டு ஆஃப்-ரோடிங் செய்ய முடியாது என்பதால் இவ்வகை டயர்கள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

தரையில் இருந்து 220 மில்லிமீட்டர் கிரவுன்ட் க்ளியரன்ஸ் கொண்டிருக்கும் இந்த மோட்டார்சைக்கிளில் எல்இடி ஹெட்லேம்ப், பாதுகாப்பு வழங்கும் வின்ட்-ஷீல்டு மற்றும் நக்கிள் கார்டுகள் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு விற்பனைக்கு வரயிருக்கும் எக்ஸ் பல்ஸ் 200 இந்தியாவில் ஒரு லட்சம் பட்ஜெட்டில் விலை நிர்ணயம் செய்யப்படும் என ஹீரோ மோட்டோகார்ப் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அந்த வகையில் ஹீரோ எக்ஸ் பல்ஸ் 200 இந்தியாவின் விலை குறைந்த ஆன்-ஆஃப் ரோடு மோட்டார்சைக்கிளாக இருக்கும். இதேபோன்ற வசதிகளை கொண்ட ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் இந்திய விலை ரூ.1.8 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :