ஸ்டார் ஹெல்த் மற்றும் அலிட் இன்சூரன்ஸ் ஆகியவற்றிலிருந்து பாலிசி எடுப்பவர்களின் பிரச்சனைகள் முடிவடையவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த நிறுவனத்தின் சுமார் 3.1 கோடி பாலிசிதாரர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்ததாக செய்தி வந்தது. இந்த தரவு டெலிகிராமில் கிடைத்தது. தற்போது மென்லோ வென்ச்சர்ஸ் நிறுவனர் டீடி தாஸ் இது குறித்து புதிய கூற்றை தெரிவித்துள்ளார்.
டேட்டா லீக் பற்றி பேசுகையில், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் கஸ்டமர்களில் 31 மில்லியன் வரிசைகள் தவறான கைகளில் விழுந்துள்ளன. இந்தத் டேட்டாக்களில் பெயர்கள், பிறந்த தேதிகள் (DOB), முகவரிகள், போன் நம்பர் மற்றும் பல உள்ளன. கூடுதலாக, தாஸ் பதிவில் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார், ‘இந்தியாவில் எதுவும் ப்ரைவசியாக வைக்க முடியவில்லை என கூறினார்
இது ஒரு பெரிய டேட்டா லீக் என்று கூறப்படுகிறது 3.1 கோடி பாலிசிதாரர்களின் தனிப்பட்ட தகவல்கள் தவறான கைகளில் சிக்கினால் அவர்கள் இலக்காகலாம். இது மக்களுக்கு பல வழிகளில் தீங்கு விளைவிக்கும். மக்களின் அடையாளத் திருட்டுதான் மிகப் பெரிய பிரச்சனை. ஹேக்கர்கள் இந்தத் தகவலைப் பயன்படுத்தி நிதி அல்லது பிற மோசடிகளைச் செய்யலாம். இந்த தகவலைப் பயன்படுத்தி ஆன்லைன் மோசடியும் மேற்கொள்ளப்படலாம்.
இதன் மூலம் இதற்கு முன்பே, ஸ்டார் ஹெல்த் மற்றும் அலிட் இன்சூரன்ஸின் டேட்டா லீக் பற்றிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன ஹேக்கர்கள் டெலிகிராமில் டேட்டாவை சாட்பாட் மூலம் வழங்கி வந்தனர். லீக் டேட்டாக்களின் படி பெயர், முகவரி, ஈமெயில் , மொபைல் நம்பர் , வரி விவரங்கள், பரிசோதனை அறிக்கைகள் மற்றும் நோய் சிகிச்சை மற்றும் மருத்துவ அறிக்கைகள் போன்ற முக்கியமான தகவல்களும் அடங்கும்.
இருப்பினும் ஸ்டார் ஹெல்த் இன்சுரன்ஸ் இந்த சம்பவம் பெரியதாக ஒன்னும் நடக்கவில்லை என கூறியது, அவர்கள் சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனர். ‘சென்ஜென்’ என்ற டெலிகிராம் பயனர் சாட்போட்களை உருவாக்கியுள்ளதாக செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவித்திருந்தது. இது ஸ்டார் ஹெல்த் பாலிசி தொடர்பான தகவல்களைக் கோருவதற்கும் பதிவிறக்குவதற்கும் பயனருக்கு வசதியை வழங்குகிறது.
டெலிகிராம் இந்த போட்டை மூடினாலும், ஹேக்கர்கள் மற்ற போட்களை உருவாக்குகிறார்கள். தற்போது தீடி தாஸின் ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டரில் மக்கள் பலவிதமான ரியாக்சனை பெறுகிறார்கள்
இதையும் படிங்க:சென்னை சேர்ந்த பிஸ்னஸ் மேன் Email scam ரூ,கோடி பறிபோனது தப்பிப்பது எப்படி