கூகிளின் டேப்லட் அறிமுகம்

Updated on 11-Oct-2018

கூகுள் நிறுவனம் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களுடன் அந்நிறுவனம் தனது புதிய டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. க்ரோம் ஓ.எஸ். மூலம் இயங்கும் புதிய டேப்லெட்டில் ஆன்ட்ராய்டு செயலிகளை கூகுள் பிளே மூலம் பயன்படுத்த முடியும்.

பிக்சல் ஸ்லேட் என அழைக்கப்படும் புதிய சாதனத்தில் 12.3 இன்ச் 3000×2000 பிக்சல் 293 PPI 2.5D வளைந்த கிளாஸ் மாலிகுலர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. வெறும் 7 மில்லிமீட்டர் அளவு மெல்லியதாக இருக்கும் பிக்சல் ஸ்லேட் முன்பக்கம் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது.

இத்துடன் டைட்டன் செக்யூரிட்டி சிப் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சாதனத்தின் கடவுச்சொற்கள் மற்றும் ஓ.எஸ். பாதுகாப்பாக இருக்கும். பிக்சல் ஸ்லேட் 8-ம் தலைமுறை இன்டெல் கோர் M3, i5 அல்லது i7 பிராசஸர், இன்டெல் செலரான் பிராசஸர் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இத்துடன் 16 ஜி.பி. ரேம் அதிகபட்சம் 256 ஜி.பி. மெமரி மற்றும் 8 எம்.பி. பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

இதன் பவர் பட்டன் கைரேகை சென்சார் போன்றும் இயங்குகிறது. புதிய பிக்சல் ஸ்லேட் 12 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. பிக்சல் ஸ்லேட் கீபோர்டில் ஹஷ் பட்டன்கள், பிரத்யேக கூகுள் அசிஸ்டன்ட் பட்டன் மற்றும் பெரிய டிராக்பேட் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக கூகுள் அறிமுகம் செய்த பிக்சல்புக் பேனாவுடன் புதிய பிக்சல் ஸ்லேட் இயங்குகிறது.

 

கூகுள் பிக்சல் ஸ்லேட் சிறப்பம்சங்கள்:

– 12.3 இன்ச் 3000×2000 பிக்சல் 293 PPI LCD டிஸ்ப்ளே
– கூகுள் பிக்சல்புக் பேனா சப்போர்ட்
– இன்டெல் செலரான் பிராசஸர் / 8th Gen இன்டெல் கோர் m3 / கோர் i5 / கோர் i7 பிராசஸர்
– 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. எஸ்.எஸ்.டி.
– 8 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. எஸ்.எஸ்.டி. / 128 ஜி.பி. எஸ்.எஸ்.டி
– 16 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி.
– க்ரோம் ஓ.எஸ்.
– 8 எம்.பி. ஆட்டோஃபோக்கஸ் பிரைமரி கேமரா, f/1.8, 1.12μm பிக்சல்
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.9, 1.4μm பிக்சல்
– பிக்சல் இம்ப்ரின்ட் கைரேகை சென்சார்
– டைட்டன் சி செக்யூரிட்டி சிப்
– வைபை, ப்ளூடூத், 2 யு.எஸ்.பி. டைப்-சி, 4K டிஸ்ப்ளே அவுட்புட்
– முன்பக்கம் டூயல் ஸ்பீக்கர்கள், 2 மைக்
– 48Wh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங்

புதிய பிக்சல் ஸ்லேட் மிட்நைட் புளு நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 599 டாலர்களில் துவங்குகிறது. பிக்சல் ஸ்லேட் கீபோர்டு விலை 199 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிக்சல்புக் பேனா விலை 99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :