இனி ஆதார் நம்பரை பயன்படுத்தி Gpay மூலம் பணம் செலுத்தலாம், அது எப்படி ?

Updated on 07-Jun-2023
HIGHLIGHTS

உங்களில் பலர் ஆன்லைன் UPI கட்டணத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்

UPI பேமண்ட் அமைப்பதற்கு டெபிட் கார்டு விவரங்கள் தேவை

ஆதார் எண்ணுடன் UPI பேமெண்ட்டுகளைப் பயன்படுத்தலாம்..

உங்களில் பலர் ஆன்லைன் UPI கட்டணத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். பொதுவாக UPI பேமண்ட் அமைப்பதற்கு டெபிட் கார்டு விவரங்கள் தேவை ஆனால் இப்போது கூகுள் இந்த தேவையை நீக்கி பெரும் நிவாரணம் அளித்துள்ளது. இப்போது நீங்கள் Google Payயை அணுகலாம் மற்றும் உங்கள் ஆதார் எண்ணுடன் UPI பேமெண்ட்டுகளைப் பயன்படுத்தலாம்..

கூகுள் இந்தியாவில் ஆதார் நம்பர் அடிப்படையின் கீழ் UPI  பேமண்ட் செலுத்துவதற்க்கு UIDAI  உடன் கைகோர்த்துள்ளது. தற்போது, ​​எந்த UPI பேமெண்ட் ஆப்ஸும் அத்தகைய வசதியை வழங்கவில்லை. எந்தவொரு UPAI பேமண்ட் பயன்பாட்டிற்கும் டெபிட் கார்டு எண் மற்றும் பின் தேவை, ஆனால் இப்போது ஆதார் எண் மட்டுமே உங்கள் வேலையைச் செய்யும்.

ஆதார் நம்பரிலிருந்து Google Pay  பயன்படுத்தி பேங்க் அக்கவுண்டை உங்களின் மொபைல் நம்பர் மூலம் செய்ய வேண்டும், ஆதரிலிருந்து மொபைல் நம்பரும்  லிங்க் ஆகியிருக்க வேண்டியது அவசியமாகும், Oogle Pay யின் இந்த வசதி தற்போது ஒரு சில பேன்க்க்ளுக்கு மட்டுமே கிடைக்கிறது, ஆனால் விரைவில் அனைத்து பெங்ககளுக்கு இது கொண்டு வரப்படும்..

ஆதார் மூலம் Gpay யில் பணம் செலுத்துவது எப்படி ?

  • செட்டிங் செய்வதற்க்கு முதலில் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து Google Pay ஆப் டவுன்லோடு செய்ய வேண்டும்,
  • இதன் பிறகு செட்டிங்கில் செல்லவேண்டும்
  • இங்கு உங்களின் டெபிட் கார்டை தவிர ஆதார் நம்பர் என்ற ஆப்சனும் வரும்,
  • இப்பொழுது  ஆதார் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து  பிறகு OTP  போடவேண்டும்.
  • OTPயை உள்ளிட்ட பிறகு, Google Pay பயன்பாட்டிற்கான PIN உங்களிடம் கேட்கப்படும்,
  • அதாவது Google Pay மூலம் நீங்கள் பணம் செலுத்தும் போதெல்லாம், உங்களுக்கு இந்த ஆறு இலக்க PIN தேவைப்படும்.
  • எனவே இந்த பின்னை நினைவில் வைத்திருக்க வேண்டும் .
  • இப்போது பின்னை அமைத்த பிறகு, உங்கள் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்ட் Google Payயில் தோன்றும்.
  • இப்போது நீங்கள் Google Payயை வசதியாகப் பயன்படுத்த முடியும்.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :