இப்போது அகவுன்டில் லொகின் செய்ய பாஸ்வார்டை பயன்படுத்த வேண்டியதில்லை, ஒரே கிளிக்கில் வேலை முடிந்துவிடும்

இப்போது அகவுன்டில் லொகின் செய்ய பாஸ்வார்டை பயன்படுத்த வேண்டியதில்லை, ஒரே கிளிக்கில் வேலை முடிந்துவிடும்
HIGHLIGHTS

பாஸ்வர்ட் ஹேக்கிங் முடிந்துவிடும்

Google Passkey உதவும்

அதை எப்படி பயன்படுத்துவது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்?

Google Passkey Login: பாஸ்வேர்டு ஹேக்கிங் பிரச்சனை இந்த நாட்களில் மிகவும் பொதுவானதாகி வருகிறது. இதைத் தவிர்க்க, Google Passkey யின் உதவியைப் பெறலாம். நீங்கள் அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.

இதற்கு முன்பும் கூட பாஸ்வேர்டுகள் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்படுவதாக பலமுறை மெசேஜ்கள் வந்துள்ளன. இந்தச் சிக்கலைச் சமாளிக்க, பயனர்கள் ஆப் மற்றும் வெப்சைட்டில் பாஸ்வர்ட் இல்லாமல் லொகின் செய்வதற்கான புதிய வழியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தீர்வின் பெயர் Passkey. உங்கள் பாஸ்வர்ட் இல்லாமல் லொகின் செய்வதற்கான பாதுகாப்பான வழி இது. இது உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்க டிவைஸின் பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் பயன்படுத்துகிறது. Passwordless Future நோக்கி இது ஒரு பெரிய படியாக இருக்கும் என்று Google கூறுகிறது. இது பயனர்களை ஹேக்கிங்கிலிருந்து பாதுகாக்கும்.

Google Passkey என்றால் என்ன?
பாஸ்வர்ட் பயன்படுத்தாமல் ஆப்கள் மற்றும் வெப்சைட்களில் லொகின் செய்ய பயனர்களை Google Passkey அனுமதிக்கிறது. இது பயனரின் டிவைஸில் உள்ள பயோமெட்ரிக் சென்சார், பின் அல்லது பேட்டர்ன் மூலம் சரிபார்க்கிறது. அனைத்து முக்கிய பிளாட்பார்ம்களிலும் Google அகவுண்ட்களுக்கு Google Passkey கிடைக்கிறது, விரைவில் மற்ற சர்வீஸ்களும் ஆதரிக்கப்படும். Google Passkey எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பதை இப்போது நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.

Google Passkey எவ்வாறு செட்டப் செய்வது:

  • உங்கள்போன் அல்லது கம்ப்யூட்டர்யில் உங்கள் வெப்பிரௌசர் திறக்கவும். நீங்கள் g.co/passkeys யில் உள்ள Google Passkey பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதன் பிறகு உங்கள் ஜிமெயில் அட்ரஸ் மற்றும் பாஸ்வர்டை உள்ளிட வேண்டும். லொகின் செய்ததும், நீங்கள் ஒரு Passkey பெறுவீர்கள்.
  • அதன் பிறகு Use Passkey பட்டனை கிளிக் செய்யவும். உங்கள் டிவைஸின் பயோமெட்ரிக்ஸ் அல்லது பின் குறியீட்டைப் பயன்படுத்தி உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கும்படி கேட்கும் பாப்-அப் தோன்றும்.
  • செயல்முறை முடிந்ததும், உறுதிப்படுத்தல் மெசேஜ்யைக் காண்பீர்கள். Passkey இயக்கப்பட்டிருப்பதை இங்கே காணலாம். எந்த டிவைஸிலும் உங்கள் Google அகவுன்டில் லொகின் செய்ய, இப்போது Passkey பயன்படுத்தலாம்.
  • இப்போது நீங்கள் எந்த அகவுண்டிலும் பாஸ்வர்ட் உள்ளிட தேவையில்லை, பயோமெட்ரிக்ஸ் மூலம் உங்களை நீங்களே சரிபார்க்க வேண்டும்.
S Raja
Digit.in
Logo
Digit.in
Logo