Google மெசேஜில் எடிட் அம்சம் இனி தவறாக அனுப்பிவிட்டோம் என்ற டென்சன் வேண்டாம்
Google மெசேஜ்களை சிறப்பானதாக்க கூகுள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது
சமீபத்தில் கூகுள் மெசேஜில் மல்டிமீடியா மெசேஜிங் வசதி வந்த நிலையில் தற்போது அதில் எடிட்டிங் செய்யலாம்
X இல் ஒரு பயனர் Google செய்தியின் இந்த அம்சத்தைப் பற்றிய தகவலை அளித்துள்ளார்
Google மெசேஜ்களை சிறப்பானதாக்க கூகுள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் கூகுள் மெசேஜில் மல்டிமீடியா மெசேஜிங் வசதி வந்த நிலையில் தற்போது அதில் எடிட்டிங் செய்யும் வசதியை அந்நிறுவனம் வழங்க உள்ளது. புதிய அப்டேட்டிற்குப் பிறகு, கூகுள் மெசேஜ் ஆப் யில் மெசேஜை அனுப்பிய பிறகு, அதைத் எடிட் செய்யலாம்
கூகுள் மெசேஜின் இந்த அம்சம் தற்போது பீட்டா டெஸ்ட்டில் உள்ளது மற்றும் அதன் இறுதி அப்டேட் அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படலாம். X யில் ஒரு பயனர் Google மெசேஜிங் இந்த அம்சத்தைப் பற்றிய தகவலை அளித்துள்ளார். நீங்கள் பீட்டா பயனராக இருந்தால், இந்த அம்சத்தை நீங்கள் சரிபார்க்கலாம்., மேலும் இது விரைவில் உலகளவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் வரும் வாரங்களில் கிடைக்கும்.
அறிக்கையின் படி இந்த அம்சம் லேட்டஸ்ட் , கூகுள் மெசேஜஸ் ஆப் யின் பீட்டா வெர்சனில் இந்த அம்சம் கண்டறியப்பட்டுள்ளது, இது messages.android_20240506_04- RC00.phone.openbeta_dynamiccom.google.android.apps.messaging. இந்தப் பதிப்பில் Google Play Store பீட்டா திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட பயனர்கள், செய்திகளை அனுப்பியவுடன் அதைத் திருத்துவதற்கான விருப்பத்தைக் காண்பார்கள். இருப்பினும், ஒரு எச்சரிக்கை உள்ளது. தற்போது, மெசேஜைப் பெறுபவரும் ஆப்ஸின் அதே பீட்டா பதிப்பில் இருக்கும்போது மட்டுமே இந்த அம்சம் செயல்படும்.
Google edit மெசேஜில் எத்தனை மணி நேரத்திற்குள் எடிட் செய்ய முடியும்.
கூகுள் மெசேஜில் மெசேஜ்களை எடிட் செய்யும் வசதி உள்ளது ஆனால் அது 15 நிமிடங்களுக்கு இருக்கும், அதாவது 15 நிமிடங்களுக்குள் மட்டுமே செய்தியை எடிட் செய்ய முடியும் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. வாட்ஸ்அப்பில் இந்த லிமிட் 30 நிமிடங்கள் என்று கூறப்படுகிறது வாட்ஸ்அப்பில், ஒரு மெசேஜை 30 நிமிடங்கள் வரை திருத்த முடியும். இந்த அம்சம் எவ்வாறு செயல்படும் என்பது பற்றிய தகவல்கள் இறுதிப் அப்டேட்டுக்கு பிறகுதான் கிடைக்கும்.
ஷேர் செய்யப்பட்ட ஸ்க்ரீன்ஷாட் படி புதிய பென்சில் ஐகான் கூகுள் சேர்த்துள்ளது இது பயனர்களின் மெசேஜ்களை எடிட் செய்ய அனுமதிக்கிறது, இருப்பினும் இதை செய்ய முதலில், பயனர்கள் தாங்கள் திருத்த விரும்பும் மெசேஜை நீண்ட நேரம் அழுத்தி, பின்னர் பென்சில் ஐகானைக் கிளிக் செய்ய வேண்டும். இது ஒரு புதிய டெக்ஸ்ட் பாக்ஸ் திறக்கிறது, அங்கு அசல் மெசேஜ் காண்பிக்கப்படும் மற்றும் திருத்த முடியும். முடிந்ததும், பாக்சுக்கு அடுத்துள்ள செக்மார்க் ஐகானைத் தட்டினால், திருத்தம் உறுதிசெய்யப்பட்டு, அதை காண்பிக்கும்.
Google has started testing the message editing feature in Google Messages which means it could arrive soon.
— AssembleDebug (@AssembleDebug) May 10, 2024
I shared about it back in February on my blog – https://t.co/gfZu1OAiHI
The editing time limit seems to be changed to 15 minutes now. #Google #Android https://t.co/jK7rNu3FXt
இதில் குறிப்பிட தக்க விஷயம் என்னவென்றால் கூகுள் ஒரு எடிட் ஹிஸ்டரியையும் வழங்குகிறது அதில் அனைவரும் அந்த உண்மையான மெசேஜ் என்பதை பார்க்கலாம் மேலும் ஒரே மெசேஜில் பல முறை எடிட் செய்யலாம், பயனர்கள் அனைத்து வெவ்வேறு வேர்சங்களில் பார்க்க முடியும். இந்த அம்சத்திற்கான உலகளாவிய ரோல்-அவுட் டைம்லைன் தொழில்நுட்ப நிறுவனமானது இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile