Google Maps யில் வருகிறது 6 புதிய அம்சம் இப்பொழுது எளிதாக பயணம் செய்யலாம்.

Updated on 29-Jul-2024
HIGHLIGHTS

Google இந்தியாவில் Google Maps பயனர்களுக்கு 6 புதிய அம்சங்களை அறிவிக்கப்பட்டுள்ளது

ஆர்டிபிசியல் இண்டேளிஜன்சில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது

கூகுள் மேப்ஸின் 6 புதிய அம்சங்களைப் பற்றி தெளிவாக பார்க்கலாம்

Google இந்தியாவில் Google Maps பயனர்களுக்கு 6 புதிய அம்சங்களை அறிவிக்கப்பட்டுள்ளது. பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும், பயணத்தில் வசதியை வழங்கவும் ஆர்டிபிசியல் இண்டேளிஜன்சில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. இந்த வாரம் தொடங்கும் அப்டேட் இந்திய பயனர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வுகளை வழங்கும். கூகுள் மேப்ஸின் 6 புதிய அம்சங்களைப் பற்றி தெளிவாக பார்க்கலாம்

AI-பவர்ட் நேரோ ரோட் தவிர்க்கவும்

செல்லவும் கடினமாக இருக்கும் சாலைகளுக்கு கூகுள் மேப்ஸ் அவர்களை அழைத்துச் செல்வதாக மக்கள் அடிக்கடி புகார் செய்வதாக கூறுகின்றனர் கூகுள் மேப்ஸ் காரணமாக, தங்கள் காரை மிகக் ஷார்ட் பாதையில் சென்றடைந்ததாகவும், அங்கிருந்து முன்னேறுவது கடினமாக இருப்பதாகவும் மக்கள் பலமுறை புகார் கூறியுள்ளனர். இதைத் தீர்க்க, கூகுள் இப்போது AI-ஐப் பயன்படுத்தி, இது போன்ற ஷார்ட் சாலைகளைத் தவிர்க்க பயனர்களுக்கு உதவுகிறது, குறிப்பாக கார்களை ஓட்டுபவர்களுக்கு.

சேட்லைட் படங்கள், தெருக் காட்சி மற்றும் பிற டேட்டாக்களை பயன்படுத்தி சாலையின் அகலத்தை கம்ப்யூட்டர் மதிப்பிடுகிறது. நெரிசலான பகுதிகளில் ஓட்டுநர்கள் சிறப்பாகச் செல்ல, ரூட்டிங் அல்காரிதம்களைச் சரிசெய்கிறது. இந்த அம்சம் முதலில் ஹைதராபாத், பெங்களூரு மற்றும் சென்னை உள்ளிட்ட 8 நகரங்களில் விரிவாக்கத் திட்டங்களுடன் கிடைக்கும்.

Fly ஓவர் நேவிகேசன்

கூகுள் மேப்ஸில் இருந்து மேம்பாலத்தில் செல்லலாமா வேண்டாமா என்பது குறித்து பயணத்தின் போது மக்கள் அடிக்கடி பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இந்தச் சிக்கலைத் தீர்க்க, கூகுள் மேப்ஸ் இப்போது 40 இந்திய நகரங்களில் பரிந்துரைக்கப்பட்ட வழித்தடங்களில் மேம்பாலங்களை முன்னிலைப்படுத்தும். இந்த அம்சம் ஓட்டுநர்கள் தங்கள் பயணத்தின் போது வரவிருக்கும் உயர்த்தப்பட்ட சாலைகளுக்கு சிறப்பாகத் தயாராக உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மெட்ரோ டிக்கெட் புக்கிங்

ONDC மற்றும் Namma Yatri அடிப்படையில் புதிய மெட்ரோ டிக்கெட் முன்பதிவு வசதியால் கொச்சி மற்றும் சென்னையில் உள்ள பொதுப் போக்குவரத்து பயனர்கள் பயனடைவார்கள். இந்த ஒருங்கிணைப்பு, பயணத்தை எளிதாக்கும் வகையில், Google Maps மூலம் நேரடியாக டிக்கெட்டுகளை வாங்க பயனர்களை அனுமதிக்கிறது.

EV சார்ஜிங் ஸ்டேஷன் ஒருங்கிணைப்பு

Google யின் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சார்ஜிங் நிலையங்களைப் பற்றிய தகவல்களை வரைபடங்கள் மற்றும் தேடலில் ஒருங்கிணைக்க EV சார்ஜிங் வழங்குநர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. பயனர்கள் இப்போது நிகழ்நேர கிடைக்கும் தன்மை மற்றும் சார்ஜர் வகையின் அடிப்படையில் வடிகட்டிகளை அணுகலாம். கூகுள் மேப்ஸில் இரு சக்கர வாகன EV சார்ஜிங் நிலையங்களைக் கொண்ட முதல் நாடு இந்தியா.

க்யூரேட்டட் லோக்கல் ரேகமடேசன்

10 முக்கிய நகரங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் பரிந்துரைக்கப்பட்ட இடங்களின் பட்டியலைத் தயாரிக்க, உள்ளூர் நிபுணர்களுடன் கூகுள் கூட்டு சேர்ந்துள்ளது, இது பயனர்கள் பயணம் செய்வதை எளிதாக்கும்.

ரோட் எக்சிடன்ட் ரிப்போர்ட் செய்வது.

அப்டேட்டில் பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்திற்கான மேம்பாடுகளும் அடங்கும், இது லோக்கல் பங்களிப்பாளர்களுக்கு சாலை விபத்துகளைப் புகாரளிப்பதற்கும் தகவலைப் பகிர்வதற்கும் எளிதாக்குகிறது. இந்த அம்சம் Android, iOS, Android Auto மற்றும் Apple CarPlay ஆகியவற்றில் கிடைக்கும். இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு மற்றும் iOS டிவைஸ்களில் இந்த அம்சங்கள் படிப்படியாக செயல்படுத்தப்படும்.

இதையும் படிங்க :Jio AirFiber செம்ம தள்ளுபடி ஆபர் இது வெறும் ஆகஸ்ட் 15 வரை மட்டுமே

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :