பாலியல் துன்புறுத்தல் வழக்கில் 48 ஊழியர்களை Google பனி நீக்கம் செத்தது…!
கூகுள் நிறுவனத்தில் சக ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு ஏற்படுத்தியதாக கடந்த இரண்டு ஆண்டுகளில் 48 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
கூகுள் நிறுவனத்தில் சக ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு ஏற்படுத்தியதாக கடந்த இரண்டு ஆண்டுகளில் 48 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த சில ஆண் ஊழியர்களை கூகுள் நிறுவனம் காப்பாற்றியதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பு கூகுள் ஊழியர்களுக்கு அந்நிறுவன தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை அனுப்பிய ஈமெயிலில் இடம்பெற்று இருந்தது. இது 2014ம் ஆண்டில் ஆன்ட்ராய்டு சொப்ட்வ்ர் அதிகாரி பாலியல் குற்றச்சாட்டு காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டதாக நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்திக்கு லைவ் பதிலாக அமைந்தது.
சுந்தர் பிச்சை எழுதியிருக்கும் ஈமெயிலில் 2015ம் ஆண்டு கூகுள் பல்வேறு கடின முடிவுகளை எடுத்தது. இவற்றில் கூகுள் துணை தலைவர்கள், மூத்த துணை தலைவர்கள் கூகுள் நிறுவனத்தில் ஒரே துறை அல்லது மற்ற துறைகளில் பணியாற்றுவோருடன் உறவு பாராட்டும் பட்சத்தில் அவற்றை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்ற விதி இருந்தது. என குறிப்பிட்டிருக்கிறார்.
இத்துடன் பாலியல் குற்றச்சாட்டு காரணமாக கூகுளில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 48 ஊழியர்களில் 13 பேர் மூத்த மேளாலர்கள் அல்லது அதிகாரிகளாக பணியாற்றி வந்தனர் என சுந்தர் பிச்சை மேலும் தெரிவித்தார். இந்த 13 பேருக்கும் கூகுள் சார்பில் பணிவிடுப்பு மற்றும் நிலுவைத் தொகை எதுவும் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
"கூகுளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் பாதுகாப்பான சூழல் ஏற்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்," என்றும் சுந்தர் பிச்சை ஈமெயிலில் தெரிவித்திருக்கிறார்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile