Google யின் செம்ம அம்சம் ஐபோனை போல Android யிலும் eSIM ட்ரான்ஸ்பர் செய்யலாம்

Updated on 31-Jan-2024
HIGHLIGHTS

இப்போது தங்கள் eSIM பழைய போனிலயுந்து புதிய போனிற்கு எளிதாக மாற்ற முடியும்.

(MWC 2023) eSIM ட்ரேன்ஸ்பர் அம்சம் விரைவில் Android போன்களில் கொண்டு வரப்படும்

ஒரு அறிக்கையின்படி, eSIM பரிமாற்றத்தின் இந்த அம்சம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Samsung Galaxy S24 சீரிச்ல் காணப்பட்டது

கோடிக்கணக்கான ஆண்ட்ராய்டு பயனர்களின் பெரும் பதற்றத்தை கூகுள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. பயனர்கள் இப்போது தங்கள் eSIM பழைய போனிலயுந்து புதிய போனிற்கு எளிதாக மாற்ற முடியும். இதற்காக அவர்கள் டெலிகாம் ஆபரேட்டரிடம் செல்ல வேண்டியதில்லை. புதிய மொபைலை அமைக்கும் போது மட்டுமே பயனர்கள் தங்கள் பழைய மொபைலில் இருந்து புதிய மொபைலுக்கு eSIM ஐ மாற்ற முடியும். கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் பிக்சல் 8 சீரிச்ல் இந்த அம்சத்தை கூகுள் சேர்த்திருந்தது. இப்போது இந்த அம்சம் மற்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் கிடைக்கிறது.

ஒரு அறிக்கையின்படி, eSIM பரிமாற்றத்தின் இந்த அம்சம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Samsung Galaxy S24 சீரிச்ல் காணப்பட்டது. Galaxy S24 Ultraஐ அமைக்கும் போது, ​​பழைய போனில் இருந்து eSIMஐ மாற்றுவதற்கான செய்தியைப் பயனர் பெறுகிறார். ஆண்ட்ராய்டு போலீஸ் இந்த அம்சத்தை முதலில் அறிவித்தது.

#eSIM

மற்ற Android போன்களுக்கும் இந்த அம்சம் கிடைக்கும்.

கடந்த ஆண்டு, கூகுள் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் (MWC 2023) eSIM ட்ரேன்ஸ்பர் அம்சம் விரைவில் Android போன்களில் கொண்டு வரப்படும் என்று அறிவித்தது. கடந்த ஆண்டு, இந்த அம்சம் முதலில் கூகுள் பிக்சல் 8 பயனர்களுக்காக வெளியிடப்பட்டது. இப்போது இந்த அம்சம் Samsung Galaxy S24 சீரிச்ல் காணப்படுகிறது. விரைவில், மற்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் இந்த அம்சம் வெளியிடப்படும். eSIM கார்டை ஆதரிக்கும் சாதனங்களுக்கு மட்டுமே இந்த eSIM ட்ரான்ஸ்பர் அம்சம் கிடைக்கும் என்பதை உங்களுக்குச் சொல்கிறோம். குறிப்பாக பயனர்கள் பிரீமியம் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் இந்த அம்சத்தைப் பெறுகிறார்கள்.

இதையும் படிங்க: முதல் முறையாக மனித மூலையில் Elon Musk chip பொருத்தியுள்ளார்

eSIM எளிதாக ட்ரான்ஸ்பர் எப்படி செய்வது?

  • புதிய ஆண்ட்ராய்டு ஃபோனை அமைக்கும் போது, ​​eSIMஐ ட்ரான்ஸ்பர் செய்வதற்க்கு மெசேஜ் கிடைக்கும்.
  • பயனர்கள் தங்கள் பழைய மொபைலில் eSIM ஐப் பயன்படுத்தினால், அதை அமைப்பதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பார்கள்.
  • இதற்குப் பிறகு, பயனர் தனது புதிய மொபைலுக்கு eSIM ஐ மாற்ற பழைய போனை திறக்க வேண்டும்.
  • புதிய eSIMஐ அமைக்க, பழைய சாதனத்தில் உள்ள eSIM சுயவிவரத்தின் QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும்.
  • இதற்குப் பிறகு, புதிய போனிற்கு eSIM ட்ரான்ஸ்பர் தொடங்குகிறது. சில நிமிடங்களில் புதிய ஆண்ட்ராய்டு போனில் eSIM சுயவிவரம் செயல்படுத்தப்படும்.

e-Sim என்றால் என்ன ?

eSIM நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ளது. eSIM என்பது ஒரு டிஜிட்டல் சிம் கார்டு, இது சாப்ட்வேர் மூலம் செயல்படுத்தப்பட வேண்டும். eSIM நீண்ட காலமாக ஐபோன்களில் பயன்பாட்டில் உள்ளது மற்றும் eSIM ஐ ஐபோன்களுக்கு இடையில் மாற்றுவது எளிது. அத்தகைய சூழ்நிலையில், ஒவ்வொரு முறையும் சிம் எக்டிவேட் செய்ய வேண்டியதில்லை.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :