Google Car Crash Detection அம்சம் இந்தியாவில் அறிமுகமாகியது, இது எப்படி வேலை செய்யும்?

Updated on 02-Nov-2023
HIGHLIGHTS

கார் விபத்துகளை கண்டறியும் வசதியை கூகுள் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்னதாக, இந்த அம்சம் அமெரிக்கா உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் மட்டுமே கிடைத்தது

இப்போது இது இந்தியா உட்பட மொத்தம் 20 நாடுகளில் கூகுள் பிக்சல் போன்களில் லைவ் செய்யப்பட்டுள்ளது

கார் விபத்துகளை கண்டறியும் வசதியை Google நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக, இந்த அம்சம் அமெரிக்கா உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் மட்டுமே கிடைத்தது, ஆனால் இப்போது இது இந்தியா உட்பட மொத்தம் 20 நாடுகளில் கூகுள் பிக்சல் போன்களில் லைவ் செய்யப்பட்டுள்ளது. பெயர் குறிப்பிடுவது போல, இந்த அம்சம் கார் விபத்துக்களை தடுக்குமா? ஆனால் உண்மையில் அப்படி இல்லை. உண்மையில் இந்த பயன்பாடு யாரையும் விபத்தில் இருந்து காப்பாற்றாது. இது அவசரகால அம்சமாகும், இது பயனர்களுக்கு அவசர உதவியைப் பெற உதவும்.

Google Car Crash Detection இது எப்படி வேலை செய்யும்?

இந்தியா போன்ற நாடுகளில் சாலை விபத்துகளால் இறப்பதற்கு ஒரு முக்கிய காரணம், விபத்துக்குப் பிறகு காயமடைந்த நபருக்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததுதான், எனவே இந்த பணியை எளிதாக்க கூகுள் கார் விபத்து கண்டறிதல் அம்சம் உதவும். கூகுள் பிக்சல் ஃபோனில் இருக்கும் அம்சம் விபத்து ஏற்பட்டால் செயலில் இருக்கும், மேலும் எமர்ஜென்சி கான்டேக்ட் எண்ணை தானாகவே அழைக்கும், இதனால் உதவி உடனடியாக உங்களைத் தொடர்புகொள்ளும்.

இந்த வசதி எந்த எந்த போன்களில் கிடைக்கும்?

கார் கிராஷ் டிடக்சன் அம்சம் கூகுள் பிக்சல் 4ஏ மற்றும் அதன் பிறகு அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து பிக்சல் போன்களிலும் கிடைக்கும். கூகுளின் இந்த எமர்ஜென்சி அலர்ட் அம்சம் ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரஞ்சு உள்ளிட்ட 20 மொழிகளை சப்போர்ட் செய்யும் கூகுளுக்கு முன்பே, ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்காக கார் க்ரேஸ் டிடக்சன் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: iQoo 12 ஸ்மார்ட்போன் சீரிஸ் இந்தியாவில் அறிமுக தேதி அறிவிப்பு

Google Car Crash இந்த அம்சத்தை எப்படி எக்டிவேட் செய்வது?

  • கூகுள் பிக்சல் ஃபோனில் கார் கிராஷ் டிடக்சன் அம்சத்தைச் செயல்படுத்த, முதலில் ஆப்ஸின் செட்டிங்ஸ் ஆப்ஷனுக்குச் செல்ல வேண்டும்.
  • இதன்பிறகு Safety&Emergency செக்சனில் செல்ல வேண்டும்.
  • பின்னர் நீங்கள் கார் கிரேஸ் டிடக்சன் அம்சத்தை தட்ட வேண்டும்.
  • இதற்குப் பிறகு, உங்கள் Google அக்கவுண்டில் லோகின் செய்ய கூகிள் கேட்கும்.
  • இதற்குப் பிறகு நீங்கள் லோகேசனிர்க்காக அக்சஸ் வழங்க வேண்டும்.
  • இது போல உங்கள் இந்த அம்சம் எக்டிவேட் ஆகிடும்.

இந்த அலர்ட் எப்படி வேலை செய்யும்?

கார் விபத்து ஏற்பட்டால், Google Pixel போனின் அதிர்வுறும் மற்றும் அதிகபட்ச அளவில் எமர்ஜென்சி ஒலியை உருவாக்கும். மேலும் ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி கான்டேக்ட் நம்பர் டயல் செய்யப்படும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :