ஜிமெயில் பொதுவாக அதிகாரபூர்வமான வேலைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், பல முறை ஈமெயில் ஆங்கிலத்திலோ அல்லது வேறு மொழியிலோ வருவதால், அந்த மொழியைப் புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. ஆனால் ஜிமெயில் இந்த பிரச்சனையை பெரிய அளவில் சமாளித்துள்ளது. ஆம், ஜிமெயில் மூலம் புதிய ட்ரான்ஸ்லேசன் அம்சம் சேர்க்கப்படுகிறது. தற்போது இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் உதவியுடன், நீங்கள் ஜெர்மன் அல்லது ரஷ்ய ஈமைளை உங்கள் மொழியில் ட்ரான்ஸ்லேசன் செய்ய முடியும்.
இந்த அம்சத்தை அனுபவிக்க, உங்கள் மொபைலில் Gmail இன் சமீபத்திய பதிப்பை நிறுவியிருக்க வேண்டும். இது ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக படிப்படியாக வெளியிடப்படுகிறது. விரைவில் இது iOS பதிப்பிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஜிமெயில் தனது சொந்த மொழியில் ஈமெயில் எழுதவும், வேறு மொழியில் அனுப்பவும் விருப்பத்தை வழங்கியது.
Gmail பயனர்கள் ஒரே கிளிக்கில் முழு மேசெஜயும் தங்கள் மொழிக்கு மாற்றிக்கொள்ள முடியும். இதற்கு நீங்கள் மொழிபெயர்ப்பு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்குப் பிறகு, நீங்கள் எந்த மொழியில் செய்தியை மாற்ற விரும்புகிறீர்களோ அதைக் கிளிக் செய்யவும். ஜிமெயில் மூலம் 100 மொழிகள் ஆதரிக்கப்படுகின்றன. அதாவது பயனர்கள் தங்கள் செய்திகளை 100 மொழிகளில் ட்ரான்ஸ்லேசன் செய்ய முடியும்.
உங்கள் ஜிமெயிலில் வேறொரு மொழியில் ஒரு மெசேஜ் வரும்போது, ஒரு பாப்அப் மெசேஜ் தானாகவே தோன்றும், ஜிமெயிலின் மொழியை உங்கள் மொழிக்கு மாற்றும்படி உங்களை எச்சரிக்கும். இது தவிர, மற்றொரு விருப்பம் வழங்கப்படும், அதில் பயனர்கள் தங்கள் மெசேஜ்களை கைமுறையாக ட்ரான்ஸ்லேசன் செய்ய முடியும். இதற்கு மேல் வலது மூலையில் கொடுக்கப்பட்டுள்ள மூன்று புள்ளிகள் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்