Gmail கொண்டு வந்துள்ளது புதிய அம்சம். இனி ஈமெயில் அனுப்பவதில் சிரமம் இருக்காது

Gmail கொண்டு வந்துள்ளது  புதிய அம்சம். இனி  ஈமெயில்  அனுப்பவதில் சிரமம் இருக்காது
HIGHLIGHTS

ஜிமெயில் பொதுவாக அதிகாரபூர்வமான வேலைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது

ஆங்கிலத்திலோ அல்லது வேறு மொழியிலோ வருவதால், அந்த மொழியைப் புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்படுகிறது

ஜிமெயில் மூலம் புதிய ட்ரான்ஸ்லேசன் அம்சம் சேர்க்கப்படுகிறது.

ஜிமெயில் பொதுவாக அதிகாரபூர்வமான வேலைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், பல முறை ஈமெயில் ஆங்கிலத்திலோ அல்லது வேறு மொழியிலோ வருவதால், அந்த மொழியைப் புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. ஆனால் ஜிமெயில் இந்த பிரச்சனையை பெரிய அளவில் சமாளித்துள்ளது. ஆம், ஜிமெயில் மூலம் புதிய ட்ரான்ஸ்லேசன் அம்சம் சேர்க்கப்படுகிறது. தற்போது இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் உதவியுடன், நீங்கள் ஜெர்மன் அல்லது ரஷ்ய ஈமைளை உங்கள் மொழியில் ட்ரான்ஸ்லேசன்  செய்ய முடியும்.

இனி மொழி பிரச்சனை இல்லை.

இந்த அம்சத்தை அனுபவிக்க, உங்கள் மொபைலில் Gmail இன் சமீபத்திய பதிப்பை நிறுவியிருக்க வேண்டும். இது ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக படிப்படியாக வெளியிடப்படுகிறது. விரைவில் இது iOS பதிப்பிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஜிமெயில் தனது சொந்த மொழியில் ஈமெயில் எழுதவும், வேறு மொழியில் அனுப்பவும் விருப்பத்தை வழங்கியது.

Gmail

என்ன நன்மை இருக்கும்.

Gmail பயனர்கள் ஒரே கிளிக்கில் முழு மேசெஜயும் தங்கள் மொழிக்கு மாற்றிக்கொள்ள முடியும். இதற்கு நீங்கள் மொழிபெயர்ப்பு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்குப் பிறகு, நீங்கள் எந்த மொழியில் செய்தியை மாற்ற விரும்புகிறீர்களோ அதைக் கிளிக் செய்யவும். ஜிமெயில் மூலம் 100 மொழிகள் ஆதரிக்கப்படுகின்றன. அதாவது பயனர்கள் தங்கள் செய்திகளை 100 மொழிகளில் ட்ரான்ஸ்லேசன்   செய்ய முடியும்.

Gmail

கிடைக்கும் அசத்தலான  அம்சம்.

உங்கள் ஜிமெயிலில் வேறொரு மொழியில் ஒரு மெசேஜ் வரும்போது, ​​ஒரு பாப்அப் மெசேஜ் தானாகவே தோன்றும், ஜிமெயிலின் மொழியை உங்கள் மொழிக்கு மாற்றும்படி உங்களை எச்சரிக்கும். இது தவிர, மற்றொரு விருப்பம் வழங்கப்படும், அதில் பயனர்கள் தங்கள் மெசேஜ்களை கைமுறையாக ட்ரான்ஸ்லேசன்   செய்ய முடியும். இதற்கு மேல் வலது மூலையில் கொடுக்கப்பட்டுள்ள மூன்று புள்ளிகள் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo