உங்களின் ஆதாரில் தவறு எதாவது இருந்தால் அதை இந்த தேதிக்குள் இலவசமாக அப்டேட் செய்யலாம்.

Updated on 05-Sep-2023
HIGHLIGHTS

ஆதார் கார்டின் பயன்பாடு அதிகமாக அதிகரித்துள்ளது.

செப்டமபர் 14 வரை எந்த வித அப்டேட்டிற்க்கும் பணம் கொடுக்க தேவை இல்லை

ஆதார் விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்டேட் செய்வது கட்டாயமாக்கியுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் ஆதார் கார்டின் பயன்பாடு அதிகமாக அதிகரித்துள்ளது. அரசின் பல திட்டங்களுக்கு ஆதார் அட்டையை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதனுடன், இன்று இந்தியாவில் ஆதார் அட்டை ஒரு முக்கிய அடையாள ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. ஆதார் அட்டை தொடர்பான ஒரு முக்கியமான அப்டேட்டைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்வது இப்போது மிகவும் முக்கியம், மேலும் ஆதார் அட்டை தொடர்பான இந்த வேலையை செப்டம்பர் மாதத்திலேயே செய்தால், மக்களின் பணத்தையும் சேமிக்க முடியும்.

ஆம் அதாவது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) எந்த ஒரு  அப்டேட்டை செய்யவேண்டுமானாலும் 50 ரூபாய் வரை  வசுளிக்கப்பட்டது ஆனால்  செப்டமபர்  14  வரை எந்த வித அப்டேட்டிற்க்கும் பணம் கொடுக்க தேவை இல்லை இலவசமாக  செய்து கொள்ள முடியும், அதாவது  அதில்  வீட்டு  முகவரி,பெயர்,பிறந்த  தேதி , பாலினம்   மற்றும் மொபைல்  நம்பர் போன்ற  பல அப்டேட்களை இலவசமாக் செய்து  கொள்ள முடியும்.

இதில்  குறிப்பிட  தக்க  விஷயம் என்னவென்றால், யாரேனும் ஒருவர் தங்கள் ஆதார் அட்டையில் போட்டோ கருவிழி அல்லது பிற பயோமெட்ரிக் விவரங்களைப் அப்டேட் செய்ய விரும்பினால், அவர்கள் ஆதார் பதிவு மையத்திற்குச் சென்று தேவையான கட்டணத்தைச் செலுத்த வேண்டும். ஏனென்றால், பயோமெட்ரிக் அப்டேட்களுக்கு பின்கர்ப்ரின்ட்கள் கருவிழிகள் மற்றும் பிற பயோமெட்ரிக் டேட்டாக்களை ஸ்கேன் செய்ய வேண்டும், இது பதிவு மையங்களில் கிடைக்கும் பயோமெட்ரிக் ஸ்கேனிங் இயந்திரங்களைக் கொண்டு மட்டுமே செய்ய முடியும். கூடுதலாக, பயோமெட்ரிக் அப்டேஷனுக்கு மோசடி நடவடிக்கைகளைத் தடுக்க சரிபார்ப்பும் தேவை.

ஏன் ஆதார் அப்டேட்  செய்ய வேண்டும்?

ஆதார் அப்டேட்  செய்வது  ஏன் முக்கியம் என்றால், UIDAI யின் படி  தங்களின் ஆதார் விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்டேட் செய்வது கட்டாயமாக்கியுள்ளது. டேட்டாக்களின் உள்ள டேட்டா துல்லியமாகவும் அப்டேட் நிலையில் இருப்பதையும் இது உறுதிப்படுத்துகிறது. மேலும் இதில்  வீட்டை நீங்கள் மாற்றி இருக்கலாம், மேலும் திருமணம் , புதிய  இடங்களுக்கு  மாறியதால்  மொபைல் நம்பர், முகவரி போன்றவை  அப்டேட் செய்வது  மிகவும் முக்கியமாகும்  இதனால் உங்களின்  டேட்டா பாதுகாப்பாக இருக்கும் மேலும் தகவலுக்கு  அதிகாரபூர்வ  வெப்சைட்டை  பார்க்கலாம்.

இந்த அப்டேட்டை ஆன்லைனில் எப்படி செய்வது?

  • இதில் அதிகாரபூர்வ  வெப்சைட் UIDAI யின் uidai.gov.in. செல்ல வேண்டும்.
  • My Aadhaar என்பதை அழுத்தி  அதை  க்ளிக்  செய்யவும், பிறகு  கீழ்தோன்றும் மெனுவிலிருந்து "உங்கள் ஆதாரைப் அப்டேட்  என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • "ஆன்லைனில் ஆதார் தகவலை அப்டேட் செய்ய  proceed to Aadhaar update"என்பதைக் கிளிக் செய்யவும்..
  • பிறகு உங்களின் ஆதார் நம்பரை மற்றும் கேப்ட்சா  வெரிபிகேசன் கோட் Send OTP என்பதை க்ளிக்  செய்யவும்.
  • பிறகு  உங்களுக்கு வந்த OTP போட்டு  லோகின்  செய்யவும்.
  • அடுத்த பக்கத்தில், நீங்கள் அப்டேட்  செய்ய விரும்பும் மக்கள்தொகை விவரங்களைத் தேர்ந்தெடுத்து புதிய விவரங்களை கவனமாக நிரப்பவும்.
  • இந்த மாற்றத்தை செய்த பிறகு Submit என்பதை க்ளிக் செய்யவும்.
  • உங்களுக்கு தேவையான டாக்யும்ண்டை ஸ்கேன் செய்து  மற்றும்   "Submit Update Request. என்பதை  க்ளிக் செய்யவும்.
  • இறுதியாக ஆதார் புதுப்பிப்பு கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, 14 இலக்க புதுப்பிப்பு கோரிக்கை எண் (URN)வழியாக உருவாக்கப்படும். மேலும்   SMS ரெஜிஸ்டர் மொபைல் நம்பரிலிருந்து ட்ரேக் செய்யலாம்
  • உங்கள் அப்டேட் கோரிக்கையின் ஸ்டேட்டசை சரிபார்த்து, myaadhaar.uidai.gov.in/ ஐப் பார்வையிடவும் மற்றும் "Check Enrolment & Update Status."என்பதைக் கிளிக் செய்யவும்
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :