இன்னும் நீங்க Aadhaar அப்டேட் செய்யவில்லையா இந்த தேதிக்குள் செய்ங்க
WhatsApp யில் கிருஷ்ணாஜென்மாஷ்டமி வாழ்த்து ஸ்டிக்கர் GIF மூலம் எப்படியெல்லாம் தெரிவிக்கலாம்.
ஆதார் கார்டு 10 ஆண்டுகளாக எந்த ஒரு அப்டேட் செய்யாமல் இருந்தால் , கண்டிப்பாக ஒருமுறை அப்டேட் செய்யவும்
UIDAI தனது அதிகாரப்பூர்வ X twitter பக்கத்தின் ஒரு ட்வீட்டில், இலவச ஆதார் அப்டேட்டுக்கான தேதி செப்டம்பர் 14, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
Aadhaar Card இன்றைய களத்தில் மிகவும் முக்கியமான ஆவணமாக மாறியுள்ளது பேங்க் அலுவலகம், சிம் உள்ளிட்ட அனைத்து சிறிய மற்றும் பெரிய வேலைகளிலும் ஆதார் கார்ட் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், பலர் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் முகவரியை மாற்றுகிறார்கள். மேலும் சிலரது பெயர்கள் மற்றும் போட்டோ தவறாக வருகிறது, மேலும் ஒரூ சிலரின் பயோமெட்ரிக் தகவல் தவறாக மாறிவிடுகிறது இது போன்ற நிலையில் உங்களின் aadhar கார்ட் அப்டேட் செய்வது என்பது கட்டாயமாகும்
சிலரின் பயோமெட்ரிக் விவரங்கள் தவறாகிவிடும். அத்தகைய சூழ்நிலையில், ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டியது அவசியம். ஆதார் அட்டை பயன்படுத்துபவர்கள் தங்கள் பழைய ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் என்றும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல, உங்கள் ஆதார் கார்டு 10 ஆண்டுகளாக எந்த ஒரு அப்டேட் செய்யாமல் இருந்தால் , கண்டிப்பாக ஒருமுறை அப்டேட் செய்யவும். செப்டம்பர் 14, 2024க்கு முன் ஆதார் கார்ட் ஆன்லைனில் அப்டேட் செய்ய கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
Aadhaar Twitter தகவல்:
UIDAI தனது அதிகாரப்பூர்வ X twitter பக்கத்தின் ஒரு ட்வீட்டில், இலவச ஆதார் அப்டேட்டுக்கான தேதி செப்டம்பர் 14, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, இது 14 ஜூன் 2024 ஆக இருந்தது. இருப்பினும், இந்த இலவச ஆதார் சேவை எனது ஆதார் போர்ட்டலில் கிடைக்கும். ஆஃப்லைன் மோடில் ஆதாரை அப்டேட் செய்ய நீங்கள் ஆதார் மையத்திற்குச் சென்றால், நீங்கள் சேவைக் கட்டணமாக ரூ 50 செலுத்த வேண்டும், இது தற்போது ஆன்லைன் மோடில் இலவசமாக வைக்கப்படுகிறது.
#UIDAI extends free online document upload facility till 14th September 2024; to benefit millions of Aadhaar Number Holders. This free service is available only on #myAadhaar portal. UIDAI has been encouraging people to keep documents updated in their #Aadhaar. pic.twitter.com/1XOfzhRnRp
— Aadhaar (@UIDAI) August 23, 2024
Aadhaar கார்ட் அபேட் செய்ய என்ன என்ன டாக்யுமென்ட் தேவை?
ஆதார் அப்டேட் செய்வதற்க்கான அடையாள அட்டை மற்றும் இரண்டாவது முகவரி ஆதாரம். இது தவிர, அடையாளச் சான்றாக பான் கார்டையும் முகவரிக்கு வாக்காளர் அட்டையையும் கொடுக்கலாம். ஆதார் கார்ட் அப்டேட் தேதி மாற்றப்படுவது இது மூன்றாவது முறையாகும்
இதையும் படிங்க : WhatsApp யில் கிருஷ்ணாஜென்மாஷ்டமி வாழ்த்து ஸ்டிக்கர் GIF மூலம் எப்படியெல்லாம் தெரிவிக்கலாம்.
ஆன்லைனில் ஆதார் கார்ட் அப்டேட் செய்வது எப்படி ?
- UIDAI யின் அதிகாரபூர்வ myaadhaar.uidai.gov.in/ யில் செல்லவும்
- பிறகு Update Aadhaar என்ற ஆப்சனை தட்டவும்.
- இதற்குப் பிறகு நீங்கள் ஆதார் நம்பர் மற்றும் OTP ஐ உள்ளிட்டு லோகின் செய்ய வேண்டும்.
- பின்னர் நீங்கள் டாக்யுமென்ட் அப்டேட் என்பதை கிளிக் செய்வதன் மூலம் வெரிபை செய்ய வேண்டும்.
- அடையாள அட்டையின் ஸ்கேன் மற்றும் முகவரிச் சான்று கீழ்தோன்றும் மெனுவில் அப்லோட் செய்யப்பட வேண்டும்.
- இதன் பிறகு Submit பட்டனில் க்ளிக் செய்ய வேண்டும்
- இப்பொழுது உங்களுக்கு ஒரு ரெகுவஸ்ட் நம்பர் ஜெனரேட் ஆகும்
- இதற்குப் பிறகு, ஆதார் அப்தேட்டின் ஸ்டேட்டஸ் நீங்கள் சரிபார்க்க முடியும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile