digit zero1 awards

அமெரிக்காவில் அறிமுகமான பறக்கும் கார்…!

அமெரிக்காவில் அறிமுகமான பறக்கும் கார்…!
HIGHLIGHTS

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த வாகனம் ஒரு பறக்கும் கார். இதன் பெயர் பிளாக் ஃப்ளை. இந்தப் பறக்கும் காரை இயக்க பைலட் உரிமம் தேவையில்லை. மணிக்கு 62 மைல்கள் வேகத்தில் இதனை இயக்க முடியும்.

ட்ராபிக் அதிகம் இருக்கும்போது நாம் அவசரமாக ஒரு இடத்திற்கு செல்ல இருப்போம் ஆனால்  போக்குவரத்து நெரிசல் காரணமாக நம்மால் சீக்கிரம் போக முடியாது அதற்க்கு  நாம மேல பரந்த எப்படி இருக்கும் என பல முறை நாம் எதிர்பார்த்ததுதுண்டு, அதை  உண்மையாக்கினால் எப்படி இருக்கும் என்று அமெரிக்க விண்ணில் பறக்கும் கார் ஒன்று அறிமுகம் படுத்தியுள்ளது.

https://static.digit.in/default/21b6ab2d1b923d38db50b075d3813c92f4bd85e6.jpeg

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த வாகனம் ஒரு பறக்கும் கார். இதன் பெயர் பிளாக் ஃப்ளை. இந்தப் பறக்கும் காரை இயக்க பைலட் உரிமம் தேவையில்லை. மணிக்கு 62 மைல்கள் வேகத்தில் இதனை இயக்க முடியும். 

https://static.digit.in/default/fdac13f84ae150380a88b37f54a9c1a306b37223.jpeg

இது போன்ற பறக்கும் கார்கள் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் குறைந்த விலை என்பதே இந்த காரின் தனிச்சிறப்பு. அதாவது இந்த பிளாக் ஃப்ளை கார்கள் எஸ்யூவி மாடல்கள் விலையிலேயே கிடைக்கும் என்கிறது இதன் தயாரிப்பு நிறுவனம். ஏற்கனவே கனடாவில் பிளாக் ஃப்ளை கார்களின் டெஸ்ட் ஓட்டம் நடந்துள்ளது. தற்போது ஒருவர் மட்டுமே அமர்ந்து பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரை புல் தரையில் இருந்து கூட டேக் ஆஃப் செய்யலாம்.

இந்தப் பறக்கும் காரை இயக்க பைலட் உரிமம் தேவையில்லை என்றாலும், இதனை இயக்குவதற்கு என பிரத்யேக பயிற்சிகளை எடுக்க வேண்டும், சில டெஸ்ட்களையும் எழுத வேண்டும் என்கிறது ஓபனர் நிறுவனம். தாமாகவே இயங்கும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மனிதர்களை சுமந்து செல்லும் ட்ரோன்கள் என அழைக்கப்படும் இது போன்ற பறக்கும் கார்களை தயாரிப்பதில் பல்வேறு நிறுவனங்களும் போட்டி போடுகின்றன. அதே வேளையில் அன்றாட பயன்பாட்டின் போது இந்த வகை கார்கள் விபத்தில் சிக்குமா? என்ற கேள்வியும் எழுகிறது. முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது அதற்கான விடை கிடைக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo