Amazon Payக்கு போட்டியாக வந்துவிட்டது Flipkart யின் புதிய சேவை

Updated on 11-Jul-2024
HIGHLIGHTS

ஃப்ளிப்கார்ட், Fastag, DTH ரீசார்ஜ், லேண்ட்லைன், பிராட்பேண்ட் மற்றும் மொபைல் போஸ்ட்பெய்ட் பில் செலுத்தலாம்

BPS ஆனது இந்திய தேசிய பெமன்ட்ஸ் காற்பறேசனால் (NPCI) உருவாக்கப்பட்டுள்ளது.

இப்போது இந்த புதிய வகைகளின் மூலம், கஸ்டமர்கள் பிளாட்ஃபார்மில் ஷாப்பிங் செய்யும் போது தங்கள் பில் மற்றும் ரீசார்ஜ் பணம் செலுத்தலாம்.

உள்நாட்டு இ-காமர்ஸ் நிறுவனமான Flipkart , Fastag, DTH ரீசார்ஜ், லேண்ட்லைன், பிராட்பேண்ட் மற்றும் மொபைல் போஸ்ட்பெய்ட் பில் பேமெண்ட்கள் உள்ளிட்ட 5 புதிய ரீசார்ஜ் மற்றும் பில் பேமெண்ட் வகைகளை அதன் ஆப்யில் அறிமுகப்படுத்தியுள்ளது. இ-காமர்ஸ் நிறுவனம், பாரத் பில் பேமெண்ட்ஸ் சிஸ்டத்துடன் (BBPS) புதிய சேவைகளை ஒருங்கிணைக்க, கட்டண தீர்வு நிறுவனமான பில்டெஸ்க் உடன் கூட்டு சேர்ந்துள்ளது. BBPS ஆனது இந்திய தேசிய பெமன்ட்ஸ் காற்பறேசனால் (NPCI) உருவாக்கப்பட்டுள்ளது.

Flipkart யின் இந்த சேவையில் எத்தனை நன்மை

இப்போது இந்த புதிய வகைகளின் மூலம், கஸ்டமர்கள் பிளாட்ஃபார்மில் ஷாப்பிங் செய்யும் போது தங்கள் பில் மற்றும் ரீசார்ஜ் பணம் செலுத்தலாம். 2024ஆம் நிதியாண்டில் பிபிபிஎஸ் நாட்டில் சுமார் 1.3 பில்லியன் பரிவர்த்தனைகளைச் செய்தது, இது 2026ஆம் ஆண்டுக்குள் 3 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BBPS அமைப்பில் 20 பில் வகைகள் மற்றும் 21000 க்கும் மேற்பட்ட செயலில் உள்ள பில்லர்களுடன், 70% க்கும் அதிகமான பில் பணம் இப்போது மின்னணு முறையில் செய்யப்படுகிறது. புதிய வகைகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டணங்களை ஏலேக்டோனிக் முறையில் செலுத்துவதற்கு பிளிப்கார்ட் புதிய வழிகளைத் திறந்துள்ளது.

#online shopping

Amazon Payக்கு போட்டியாக Flipkart டிஜிட்டல் பே

Amazon Pay யில் மொபைல் ரீச்சார்ஜ் மற்றும் பில் பேமன்ட் சேவை ஏற்கனவே இருக்கிறது மற்றும் இதை லட்ச கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், பிளிப்கார்ட்டின் இந்த புதிய சலுகை அமேசானுக்கு கடும் போட்டியை கொடுக்க உள்ளது. இப்போது கேள்வி என்னவென்றால், மக்கள் அமேசானை விட்டுவிட்டு பிளிப்கார்ட்டை நோக்கி நகர்வார்களா? எனவே அமேசானை விட Flipkart தனது சேவையை சிறப்பாகவும், தடையற்றதாகவும் மாற்றினால் மட்டுமே இது சாத்தியம் என நினைக்கிறேன். அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் இடையே யாருடைய சேவை சிறந்தது என்பதை காலப்போக்கில் தெரிந்துகொள்வோம்.

#Flipkart Digital pay

Flipkart யில் பேமன்ட் சூப்பர் காயின்களின் வைஸ் பிரசிடன்ட் கவுரவ் அரோரா கூறுகையில், “டிஜிட்டல் பேமென்ட் துறையில் விரைவான வளர்ச்சியுடன், வாடிக்கையாளர்கள் தங்கள் பில் செலுத்துவதற்கு மின்னணு முறைகளை அதிகளவில் தேர்வு செய்கின்றனர். “வாடிக்கையாளர்களுக்கான டிஜிட்டல் பேமெண்ட்டுகளை எளிதாக்குவதற்கும், பணமில்லா பொருளாதாரம் பற்றிய அரசாங்கத்தின் பார்வையை முன்னேற்றுவதற்கும் பிளிப்கார்ட்டின் பார்வைக்கு ஏற்ப நாங்கள் எங்கள் தேர்வு சேவைகளை பன்முகப்படுத்தியுள்ளோம்.”

BillDesk யின் இணை நிறுவனர் மற்றும் இயக்குநரான அஜய் கௌஷல், “எங்கள் நீண்டகால கூட்டாளியான Flipkart க்கு BBPS சேவையை விரிவுபடுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். “இந்த மூலோபாய விரிவாக்கத்தின் மூலம், Flipkart வாடிக்கையாளர்கள் BBPS திறன்களைப் பயன்படுத்தி தடையற்ற பில் பேமெண்ட்களை அனுபவிக்க முடியும், சரியான நேரத்தில் அறிவிப்புகளைப் பெறுவார்கள் மற்றும் அவர்கள் விரும்பும் பில்லர்களுடன் பில்லில் உள்ள நிலுவைகளை சரிபார்க்க முடியும்.”

Shopsy விற்பனையாளர்கள் உட்பட 1.4 மில்லியனுக்கும் அதிகமான விற்பனையாளர்களைக் கொண்டுள்ள பிளிப்கார்ட் சமீபத்தில் தனது UPI சேவையை அறிமுகப்படுத்தியது.

இதையும் படிங்க: Vodafone Idea யின் இந்த திட்டத்தில் 50GB போனஸ் டேட்டா வழங்கப்படுகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :