Flipkart big Shopping Days Sale:சாம்சங் கேலக்சி On Nxt ஸ்மார்ட் போனின் கீழ் Rs 10,900க்கு வாங்க இது மிக சிறந்த வாய்ப்பு ஆகும்

Updated on 12-May-2018
HIGHLIGHTS

Flipkart விரைவில் அதன் Flipkart Big Shopping Days sale கொண்டு வருகிறது இந்த சேல் 13 மே முதல் 16 மே வரை இருக்கும்

பிளிப்கார்ட் வெப்சைட்டில் நான்கு நாட்களுக்கு சிறப்பு விற்பனை திருவிழா நடைபெற இருக்கிறது. மே 13ம்லிருந்து 16 தேதி  வரை  இருக்கும் இந்த  சிறப்பு விற்பனை பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் என அழைக்கப்படுகிறது. 

ஸ்மார்ட்போனில் கிடைக்கும் ஆபர் 

சிறப்பு விற்பனையின் முன்னோட்டமாக சில சலுகைகள் மற்றும் அறிவிப்புகள் பிளிப்கார்ட் தளத்தில் பதிவிடப்பட்டு இருக்கின்றன. அந்த வகையில் இந்தியாவில் ரூ.61,000 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் ரூ.26,001 விலை குறைக்கப்பட்டு சிறப்பு விற்பனையில் ரூ.34,999-க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது. 

இதேபோன்று பிக்சல் 2 XL, சாம்சங் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் மற்றும் பல்வேறு இதர ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன. இந்தியாவில் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் ரூ.44,999 விலையில் விறப்னை செய்யப்படுகிறது. 

இதன் உண்மை விலையில் ரூ.8001 தள்ளுபடி, தேர்வு செய்யப்பட்ட வங்கி டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.8000 கேஷ்பேக் மற்றும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.18,000 வரை தள்ளுபடி உள்ளிட்டவை சேர்த்து இந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

லேப்டாப் போன்றவற்றிலும்  கிடைக்கிறது இந்த டீல்ஸ் 

இத்துடன் செலக்ட் செய்யப்பட்ட லேப்டாப் மாடல்களுக்கு ரூ.37,000 வரை தள்ளுபடி, கூகுள் க்ரோம்காஸ்ட் 2, எக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ், பிஎஸ் 4 ப்ரோ / ஸ்லிம் உள்ளிட்டவற்றுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் ஹெட்போன்களுக்கு 50 முதல் 70% தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது. வயர்லெஸ் சவுன்ட்பார் துவக்க விலை ரூ.9,999 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று மிஸ்ஃபிட் வேப்பர், சியோமி Mi பேன்ட் 2, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 மற்றும் பல்வேறு இதர சாதனங்கலுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட இருக்கின்றன. மேலும் ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. அதாவது அதிகாலை 12.00 மணி, காலை 6.00 மணி, மதியம் 12.00 மணி மற்றும் மாலை 6.00 மணிக்கு இந்த அறிவிப்புகள் வெளியாகும்.

மற்ற சலுகைகள் 

பிளிப்கார்டின் இந்த சேலில் HDFC பேங்க் ஆபர் வழங்கப்படுகிறது,ல் இதன் அர்த்தம் நீங்கள் இந்த சேலில் HDFC பேங்கின் கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் பயன்படுத்தி பொருட்களை  வாங்கினால் உங்களுக்கும் இதில் 10சதவீதம்  தள்ளுபடி கிடைக்கும் இதை தவிர இந்த பொருட்களில் உங்களுக்கு No Cost EMI ஒப்சனும் இருக்கிறது மற்றும் இதனுடன்  மற்ற ஆபர்கல் பை பேக் கேரண்டி மற்றும் பல பரிசுகள் அடங்கியுள்ளது 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :