வாகனத்தில் FASTag பொருத்தாமல் சுங்கச்சாவடியைக் கடந்தால், சாதாரண சுங்கக் கட்டணத்திற்கு இணையான அபராதம் விதிக்கப்படலாம். நாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் மேம்பாடு, பராமரிப்பு மற்றும் மேலாண்மைக்கு பொறுப்பான இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), நெடுஞ்சாலை பயனர்கள் தங்கள் வாகனங்களின் கண்ணாடியில் வேண்டுமென்றே FASTag லேபில் ஒட்டாமல் செல்வோருக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளது
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணத்தை நேரடியாகவோ அல்லது பொது-தனியார் கூட்டாண்மை மூலமாகவோ (PPP) வசூலிக்கும் அதிகாரசபையின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, ‘பயனர்கள் முன் கண்ணாடியில் உள்ளிருந்து ஃபாஸ்டேக் அணியாமல் சுங்கச்சாவடிக்குள் நுழைகிறார்கள்’ என்பது சாதாரணமானது. அப்படி செல்லும் பயனரிடம் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
சுங்கச்சாவடியைக் கடக்கும்போது உங்கள் காரின் கண்ணாடியில் சரியான இடத்தில் Fastag ஒட்டவில்லை என்றால், விரைவில் நீங்கள் இரு மடங்கு கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். நெடுஞ்சாலை ஆணையம் NHAI வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, வாகனத்தின் முன்பக்கத்தில் சரியான இடத்தில் ஃபாஸ்டாக் ஒட்டவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கண்ணாடியில் ஃபாஸ்டேக் ஒட்டாமல் சுங்கச்சாவடிகளில் தேவையற்ற தாமதங்கள் ஏற்படுகின்றன, இதனால் மற்ற நெடுஞ்சாலைப் பயனாளிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.
Fastag ஐ ஒட்டாமல் இருப்பர்வர்களுக்கு இருமடங்கு பயனர் கட்டணத்தை விதிப்பது, சுங்கச்சாவடிச் செயல்பாடுகளை மேலும் திறம்படச் செய்வதற்கும், தேசிய நெடுஞ்சாலையைப் பயன்படுத்துபவர்களுக்கு தடையற்ற மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதற்கும் உதவும்.
NHAI தேசிய நெடுஞ்சாலை கட்டணம் (விகிதங்கள் மற்றும் வசூல் நிர்ணயம்) விதிகள், 2008ன் படி தேசிய நெடுஞ்சாலைகளில் பயனர் கட்டணத்தை வசூல் செய்கிறது, முன்பக்க கண்ணாடியில் FASTag பொருத்தப்படாவிட்டால், பயனர் கட்டணத்தை இருமடங்காக வசூலிக்க, நாடு முழுவதும் உள்ள பயனர் கட்டண வசூல் முகவர் மற்றும் சலுகையாளர்களுக்கு விரிவான நிலையான இயக்க முறைமை (SOP) எனப்படும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: Microsoft 365 down: இந்த சேவை எல்லாம் வேலை செய்யாது