Fake Challan ஸ்கேம் எச்சரிக்கை மக்களே தப்பி தவறிகூட இந்த லிங்கை க்ளிக் செய்யாதிர்கள்.
புதிய போலி இ-சலான் மோசடி குறித்து ஃபரிதாபாத் போலீசார் மக்களை எச்சரித்துள்ளனர்.
மோசடி செய்பவர்கள் போக்குவரத்து காவல்துறையினரிடமிருந்து வரும் மெசேஜ்களை போல மக்களுக்கு அனுப்புகிறார்கள்
இந்த லிங்கை கிளிக் செய்த பிறகு, மக்கள் ஒரு போலி வெப்சைட்டிற்கு திருப்பி விடப்படுகிறார்கள்.
இந்தியாவில் சைபர் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு நாளும், மோசடி செய்பவர்கள் பேங்க் அக்கவுண்ட் சஸ்பென்ட் , ஆன்லைன் சேவைகளைச் சுரண்டுவதற்கும் மக்களை ஏமாற்றுவதற்கும் புதிய வழிகளைக் கொண்டு வருகிறார்கள். சைபர் கிரைம் அதிகரித்து வரும் நிலையில், இப்பொழுது ஒரு புதிய வகை மோசடி ஒன்று முன்னுக்கு வந்துள்ளது ஃபரிதாபாத் காவல்துறை, புதிய போலி இ-சலான் மோசடி குறித்து மக்களை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த Fake challan என்றால் என்ன?
இது ஒரு புதிய வகை மோசடி. காவல்துறையின் யின் படி மோசடி செய்பவர்கள் போக்குவரத்து காவல்துறையினரிடமிருந்து வரும் மெசேஜ்களை போல மக்களுக்கு அனுப்புகிறார்கள். பெறுநர் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாகவும், அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அந்தச் மெசேஜில் குறிப்பிடப்பட்டுள்ளது. அபராதம் செலுத்த ஒரு லிங்க் அனுப்ப படுகிறது அதில் பெறுநர் கிளிக் செய்யும்படி அறிவுறுத்தப்படும் இதில் லிங்க் மெசேஜ்கள் அடங்கும்..
இருப்பினும் இந்த லிங்கை கிளிக் செய்த பிறகு, மக்கள் ஒரு போலி வெப்சைட்டிற்கு திருப்பி விடப்படுகிறார்கள். அதன் பிறகு பணம் எடுக்கப்படுகிறது. அனுப்பிய லிங்கை க்ளிக் செய்வதன் மூலம் ஹேக்கர்கள் தங்களின் மொபைல் அக்சஸ் வழங்கப்படுகிறது இது தவிர, பல நேரங்களில் பயனர்களின் போன்களும் லிங்க் செய்வதன் மூலம் ஹேக் செய்யப்பட்டு தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகின்றன மேலும் அக்கவுண்டிளிருக்கு மொத்த பணத்தையும் திருடுகிறார்கள்.
சமீபத்திய மீடியா உரையாடலில், ஃபரிதாபாத் டிசிபி தலைமையகமும் சைபர் கிரைம் அதிகாரியுமான ஹேமேந்திர குமார் மீனா, சைபர் குற்றவாளிகள் தற்போது இ-சலான் பேமெண்ட்டுகளின் அதிகரித்து வரும் பிரபலத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று கூறினார். அவர்கள் போலியான e-சலான் மெசேஜ்களை அனுப்புகிறார்கள், அவை தோற்றத்தில் ஒரே மாதுரியாக இருக்கும்.
உண்மையா எது போலி எது என்று எப்படி கண்டுபிடிப்பது ?
அசல் சலான் மெசேஜ்கள் இன்ஜின் எண், சேஸ் எண் போன்ற தகவல்கள் இருப்பதாக ஹேமேந்திர குமார் மீனா தெரிவித்தார். அசல் சலான் மேசெசுடன் வரும் லிங்கை கிளிக் செய்தால், லிங்க் பயனர்களை அதிகாரப்பூர்வ அரசாங்க தளமான https://echallan.parivahan.gov.in க்கு திருப்பிவிடும். போலி தளத்தின் இணைப்பு https://echallan.parivahan.in/. இதில், .gov.in நீக்கப்பட்டுள்ளது. என கூறினார்
e challan ஸ்கேமிளிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?
- நீங்கள் தேவை இல்லாத எந்த மெசேஜில் உள்ள லிங்கையும் க்ளிக் செய்யாதிர்கள், இது பார்க்க உண்மையான ட்ராஃபிக் போலீஸ் வெப்சைட் போல தெரியும், ஆனால் போலியான வெப்சைட்டுக்கு உங்களை அழைத்து செல்லும் போலியான வெப்சைட்டில் உங்களின் தனிப்பட்ட தகவலை போடும்போது உங்களின் பணத்தை திருடுவதர்க்கு அது எளிதான வழிவகுக்கும்
- உண்மையாகவே போக்குவரத்து விதி மீறலால் உங்களுக்கு மெசேஜ் நோட்டிபிகேசன் வருகிறது என்று நினைத்தால், போக்குவரத்து காவல் துறையை நேரடியாகத் தொடர்புகொள்ளவும், போக்குவரத்து போலீஸ் அதிகாரியிடம் பேசும் வரை பணம் செலுத்த வேண்டாம்.
- உங்கள் தனிப்பட்ட அல்லது பைனான்சியல் தகவலைக் கேட்கும் எந்த தகவலை போன் மூலமாகவோ அல்லது மெசேஜ் மூலமாகவோ கேட்க மாட்டார்கள்.எந்தச் மேசெஜயும் சந்தேகப்படும்படி இருந்தால் சட்டப்பூர்வமான போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும்,
- போக்குவரத்து காவல் துறையின் அதிகாரப்பூர்வ வெப்சைட் மூலம் மட்டுமே இ-சலான்களை செலுத்தவும். இந்தியாவில் இ-சலான்களுக்கான அதிகாரப்பூர்வ இணையதளம் https://echallan.parivahan.gov.in/. ஆகும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile