பிரபல சோசியல் மீடியா வெப்சைட்டான ஃபேஸ்புக் கேரள வெள்ள பாதிப்புகளுக்கு சுமார் 2,50,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1.75 கோடி) வழங்குவதாக அறிவித்துள்ளது. நிதியுதவியை டெல்லியை சேர்ந்த கம்யூனிட்டி ரெசிலன்ஸ் ஃபண்ட் ஃபார் கூன்ஜ் (Community Resilience Fund for GOONJ ) எனும் தொண்டு நிறுவனம் மூலம் வழங்குகிறது.
கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக் தனது அம்சங்களின் மூலம் பாதிக்கப்பட்டவர்களை உதவும் நோக்கிலும், உதவி செய்வோரை அவர்களுடன் சேரும் வேளைகளில் ஈடுபட்டு வந்ததாக ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சர்வதேச சமுதாயத்தின் மூலம் ஃபேஸ்புக்கின் சிறிய பங்களிப்பாக 2,50,000 டாலர்கள் வழங்குகிறது. என அவர் மேலும் தெரிவித்தார்.
ஆகஸ்டு 8-ம் தேதி துவங்கிய மழை தொடர்ந்து அதிகரித்து வரலாறு காணாத அளவு கனமழையாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு என கேரளாவின் பெருமளவு மாவட்டங்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு இருக்கிறது. பாதிப்புகளில் சிக்கி இதுவரை சுமார் 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல ஆயிரம் பேர் தங்களது வீடுகளை இழந்து உள்ளார்கள்
உலகம் முழுக்க ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் கேரள வெள்ள பாதிப்புகளுக்கு உதவ பிரத்யேக க்ரூப்கள், லைவ் வீடியோக்கள் மற்றும் பக்கஙக்ளை துவங்கி நிவாரன உதவிகளில் ஈடுபட்டுள்ளனர். க்ரூப்களின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரன பொருட்களை வழங்குவது குறித்த தகவல் பரிமாற்றம் செய்ய வழி செய்கிறது.
ஆகஸ்டு 9-ம் தேதி சேஃப்டி செக் அம்சத்தை ஃபேஸ்புக் செயல்படுத்தியது. இதன் மூலம் மக்கள் தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறது. ஃபேஸ்புக்கின் ஹெல்ப் அன்ட் க்ரைசிஸ் டொனேட் பட்டன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 1,300-க்கும் அதிகமான போஸ்ட்களை ஈர்த்திருக்கிறது. மேலும் க்ரைசிஸ் டொனேட் பட்டன் மூலம் இதுவரை 500 பேர் நிதியுதவி வழங்கியுள்ளனர்.