Exclusive: Poco Pad 5G இந்தியாவில் ஆகஸ்ட் 23 அறிமுகமாகும் இதன் அம்சம் எப்படி இருக்கும்

Exclusive: Poco Pad 5G இந்தியாவில் ஆகஸ்ட் 23 அறிமுகமாகும் இதன் அம்சம் எப்படி இருக்கும்
HIGHLIGHTS

டிஜிட் மற்றும் டைம்ஸ் நவ் டெக் POCO இந்தியாவின் நாட்டுத் தலைவர் ஹிமான்ஷு டாண்டனுடன் ஒரு நேர்காணலை நடத்தியது

ஆகஸ்ட் மாத இறுதியில் POC பேட் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம்

POCO Pad 5G ஆகஸ்ட் 23, 2024 அன்று இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது

கடந்த மாதம், டிஜிட் மற்றும் டைம்ஸ் நவ் டெக் POCO இந்தியாவின் நாட்டுத் தலைவர் ஹிமான்ஷு டாண்டனுடன் ஒரு நேர்காணலை நடத்தியது, அதில் ஆகஸ்ட் மாத இறுதியில் POC பேட் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும், POCO Pad 5G ஆகஸ்ட் 23, 2024 அன்று இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்ற உறுதியான தகவல் இப்போது எங்களிடம் உள்ளது.

இதனுடன் Poco Pad 5G நிறுவனம் அக்சஸ்ரிஸ் கீபோர்ட் கவர் மற்றும் ஸ்டைலஸ் இவை அனைத்தையும் டைம்ஸ் நெட்வொர்க் மற்றும் டிஜிட் அணுகிய படத்தில் காணலாம்.

Poco Pad 5G ஆனது இந்திய சந்தையில் OnePlus Pad Go மற்றும் Redmi Pad Pro 5G உடன் நேரடியாக போட்டியிடும். இது Snapdragon 7s Gen 2 செயலியில் இயங்குகிறது மற்றும் 10,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும் இதன் முழு தகவல்களை பார்க்கலாம்.

Poco Pad 5G சிறப்பம்சம்.

போகோ பேட் ஏற்கனவே உலக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. Poco வழங்கும் இந்த முதல் டேப்லெட்டில் 2560 x 1600 பிக்சல்கள் ரெசளுசன் கொண்ட 12.1 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே உள்ளது. Poco டேப்லெட் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 600 nits ஹை ப்ரைட்னாஸ் உடன் வருகிறது.

மேலும் இதில் இதில் Snapdragon 7s Gen 2 ப்ரோசெசர் உடன் இதில் 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வகையில் இருக்கிறது, இந்த டேப்லெட் செல்லுலார் சப்போர்டுடன் வருகிறது, மேலும் மெமரி கார்டுக்கான பிரத்யேக ஸ்லாட்டையும் வழங்குகிறது Poco Pad 5G ஆனது Android 14 ஐ அடிப்படையாகக் கொண்ட HyperOS யில் இயங்குகிறது.

இதை தவிர இந்த போனில் செல்பிக்கு 8 மெகாபிக்சல் செல்பி கேமரா இந்த டேப்லெட் உடன் வருகிறது மேலும் இதன் பிபுரத்திலும் அதே 8 மெகாபிக்சல் மெயின் கேமரா இருக்கு.

கடைசியாக Poco Pad 5G யில் 10,000mAh பேட்டரி உடன் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது.

இதன் விலை என்ன இருக்கும் ?

Poco Pad 5G இன் விலை இன்னும் வெளியிடப்படவில்லை, இருப்பினும் இது இந்தியாவில் ரூ.25,000 முதல் ரூ.30,000 விலையில் வழங்கப்படலாம் என்று நம்பப்படுகிறது. இப்போது உண்மையான விலை அதன் வெளியீட்டு நேரத்தில் மட்டுமே தெரியவரும், அதுவரை நீங்கள் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo