டொமெஸ்டிக் வயர்லைன் இன்டர்நெட் சேவை வழங்குநரான Excitel புதிய பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, அதனுடன் இலவச ஸ்மார்ட் டிவி அல்லது ப்ரொஜெக்டர் வழங்கப்படுகிறது. நிறுவனம் சமீபத்தில் இரண்டு புதிய பெரிய ஸ்க்ரீன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றின் விலை ரூ.1,299 மற்றும் ரூ.1,499. இது அதிவேக இன்டர்நெட் OTT சந்தா, இலவச லைவ் டிவி சேனல்கள் மற்றும் இலவச ஸ்மார்ட் டிவி அல்லது HD புரொஜெக்டரை வழங்குகிறது. இந்தச் சலுகை 35க்கும் மேற்பட்ட நகரங்களில் கிடைக்கிறது..
ரூ.1,299 விலையுள்ள பிராட்பேண்ட் திட்டம் அன்லிமிடெட் டேட்டாவுடன் வருகிறது. இது 400Mbps ஸ்பீட் வழங்கப்படும். இது தவிர, 16 OTT சப்ச்க்ரிப்சன் மற்றும் 550 க்கும் மேற்பட்ட இலவச லைவ் டிவி சேனல்களுக்கான அணுகலைப் வழங்குகிறது இதுமட்டுமின்றி, இலவச வைபோர் (Wybor)32 இன்ச் ஸ்மார்ட் ஃப்ரேம்லெஸ் HD கிளவுட் டிவியும் வழங்கப்படுகிறது.
ரூ.1,499 விலையுள்ள பிராட்பேண்ட் திட்டம் அன்லிமிடெட் டேட்டாவுடன் வருகிறது. இது 400Mbps ஸ்பீட் வழங்கப்படும். இது தவிர, 16 OTT சப்ச்க்ரிப்சன் மற்றும் 550 க்கும் மேற்பட்ட இலவச லைவ் டிவி சேனல்களுக்கான அணுகலைப் வழங்குகிறது இது மட்டுமின்றி, இந்த திட்டத்தில் இலவச EGate K9 Pro-Max ஆண்ட்ராய்டு புரொஜெக்டர் வழங்கப்படும். கூடுதலாக நிறுவனம் இந்த இரண்டு திட்டத்திலும் நோ கோஸ்ட் EMI ஒப்சனின் அட்வான்டேஜ் வழங்குகிறது.
Disney+ Hotstar, SonyLIV, ZEE5 மற்றும் பல போன்ற OTT பயன்பாடுகளுக்கான சந்தா இரண்டு திட்டங்களிலும் வழங்கப்படுகிறது. Excitel இரண்டு திட்டங்களிலும் நோ-காஸ்ட் EMI ஐ வழங்குகிறது.
ஏப்ரல் 2023 யில் டெல்லியில் இலவச ஸ்மார்ட் டிவிகளுக்கான பைலட் திட்டத்தை Excitel அறிமுகப்படுத்தியது. அதன் வரவேற்ப்பு நன்றாக இருந்தது. இதற்குப் பிறகு, Excitel நாடு முழுவதும் ""BIG SCREEN PLAN" வெளியிட்டது. ஸ்மார்ட் டிவி திட்டம் ஸ்மார்ட் வைஃபை உடன் வழங்கப்படுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த திட்டங்களில் ஸ்மார்ட் டிவி அல்லது புரொஜெக்டர் கொடுக்கப்படுகிறது.
இதற்கு, இந்தத் திட்டங்களில் ஒன்றில் சப்ஸ்க்ரைப் செய்ய வேண்டும் அல்லது அப்போது முதல் மாத பில் கட்ட வேண்டும். இதற்குப் பிறகு ஸ்மார்ட் டிவி அல்லது புரொஜெக்டர் 7-10 வேலை நாட்களுக்குள் இலவசமாக வழங்கப்படும். இந்தச் சலுகை புதிய மற்றும் ஏற்கனவே உள்ள Exitel Broadband பயனர்களுக்குக் கிடைக்கும். excitel.com/broadband-plans/ என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு சென்று புதிய கனேக்சனை பெறலாம்