ஈரோடு இடைத்தேர்தல் நடந்துவருகிறது வாக்களிக்க வோட்டர் லிஸ்டில் பெயர் இருக்கிறதா எப்படி தெரிந்து கொள்வது?

Updated on 27-Feb-2023
HIGHLIGHTS

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்றைய தினம் (திங்கள்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது

வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா எப்படி தெரிந்து கொள்வது?

Erode bypoll today: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் எம்எல்ஏ-வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வெ.ரா இறந்ததால் அந்த தொகுதியில் ஏற்பட்ட காலியிடத்தை தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்றைய தினம் (திங்கள்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.  திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் (கை சின்னம்) போட்டியிடுகிறார்.

திமுக-வை எதிர்த்து அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு (இரண்டு இலை சின்னம்) போட்டியிடுகிறார்.  இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளைத் தவிர, நாம் தமிழர் கட்சி (என்டிகே) மேனகா நவநீதன் (கரும்பு விவசாயி), தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் எஸ் ஆனந்த் (முரசு சின்னம்) ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.  கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் (எம்என்எம்) மற்றும் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை முறையே காங்கிரஸுக்கும், அதிமுகவுக்கும் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளன.  விறுவிறுப்பாக நடந்து வரும் தேர்தலில்  மக்களும் காலையில் இருந்துஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள் அதனை தொடர்ந்து வோட்டர் லிஸ்டில்  வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா எப்படி தெரிந்து கொள்வது?

    வாக்காளர் அட்டை என்பது மிக முக்கியமான சான்றாகும். புகைப்பட அடையாளத்துடன் கூடிய வாக்காளர் அட்டை (Voter ID) முதன்முதலில் 1993 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 

    வோட்டர் லிஸ்டில் உங்கள் பெயர் இருக்கிறதா எப்படி தெரிந்து கொள்வது?

    • www.nvsp.in  என்ற தேசிய வாக்காளர் சேவை போர்ட்டலுக்கு சென்று போர்ட்டலின் மேல் இடது மூலையில், ‘வாக்காளர் பட்டியலில் தேடு’ (Search in electoral roll) என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் https://electoralsearch.in/) என்ற பக்கத்திற்கு செல்லலாம்.
    • நீங்கள் உங்கள் தனிப்பட்ட விவரங்களை பதிவிட்டும் தேடலாம் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண் (Electors Photo Identity Card) மூலம் மேற்கொள்ளும் தேடலைத் தேர்வு செய்யலாம்.
    • EPIC எண் மூலம் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என தேட, உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் வழங்கப்பட்ட எண்ணை நீங்கள் உள்ளீடு செய்ய வேண்டும்.
    • இந்த வலைதளத்தில், நீங்கள் பூத் நிலை அதிகாரி (BLO), வாக்காளர் பட்டியல் அதிகாரி (ERO) மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தலைமைத் தேர்தல் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் யார் என்பது போன்ற விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
    • தமிழக தேர்தல் ஆணையத்தின் elections.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில், இதுதொடர்பான மேலும் தகவல்களை பெறலாம். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயரை சேர்க்க விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் பதிவு அதிகாரிகளிடம் படிவம் எண் 6-ஐ சமர்பிக்க வேண்டும். Voter Helpline App என்ற மொபைல் ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்படுகிறது. கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
    Sakunthala

    சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

    Connect On :