EPFO யில் பல கோடி மக்களுகாக வந்த புதிய அப்டேட் இதில் அப்படி என்ன நன்மை இருக்கு?

Updated on 31-Aug-2023
HIGHLIGHTS

EPFO தகவலை அப்டேட் செய்வதற்காக புதிய செயல்முறையை வெளியிட்டுள்ளது

ப்ரோபைல் தகவலை இனி எளிதாக அப்டேட் செய்யலாம்.

டேட்டா மிஸ்மேட்ச் ஏற்படும் மோசடிகளை தவிர்க்கலாம்.

ஊழியர்களின் வருங்கால பேலன்ஸ் நிதி அமைப்பு (EPFO) மெம்பர்களின் அக்கவுண்ட்களின் பெயர், ஆதார் உள்ளிட்ட 11 தகவல்களை அப்டேட் செய்ய புதிய செயல்முறையை வெளியிட்டுள்ளது. அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் i) Name, ii) Gender, iii) Date of birth, iv) Father name, v) Relationship, vi) Martial status, vii) Date of joining, viii) Reason for leaving, ix) Date of leaving, x) Nationality and xi) Aadhaar number.ஆகியவற்றை அப்டேட் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிய செயல்முறை EPF மெம்பர்கள் தங்கள் ப்ரோபைல் விவரங்களை அப்டேட்டை எளிதாக்கும் மற்றும் க்ளைம் ப்ரோசெசிங் இந்த காரணங்களால் நிராகரிப்புகளைத் தவிர்க்கும். இதனுடன், டேட்டா பொருந்தாததால் ஏற்படும் மோசடிகளையும் தவிர்க்கலாம்.

"முறைகேடு மற்றும் நடைமுறைகள் தரமற்றதாக இருப்பதால், சில சந்தர்ப்பங்களில் உறுப்பினரின் அடையாளம் சிதைந்து, மோசடிக்கு வழிவகுத்தது கவனிக்கப்படுகிறது," என்று சமீபத்தில் வெளிவந்த அறிக்கையில் கூறுகிறது. இதை விட அதிகமான மாற்றங்களில் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த அப்டேட் கோரிக்கைகளின் செயலாக்கத்தைப் பொருத்தவரை, சிறிய மாற்றங்களுக்கு, ப்ரோபைல் T+7 நாட்களுக்குள் அப்டேட் செய்யப்படும் பெரிய மாற்றங்களுக்கு, T+15 நாட்களுக்குள் செய்யப்படும்.

இதற்க்கு தேவைப்படும்  டாக்யுமேன்ட்கள் என்ன ?

ஒவ்வொரு  மாற்றத்திற்கும்  டாக்யுமென்ட்  ப்ரூப்  அவசியம் தேவைப்படும் , அது சிறிய அப்டேட்டாக இருந்தாலும் சரி பெரிய அப்டேட்டாக இருந்தாலும் சரி  அணைத்திருக்கும் இது  பொருந்தும், சிறிய மாற்றங்களுக்கு, கொடுக்கபட்ட  லிஸ்டிலிருந்து குறைந்தது இரண்டு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். பெரிய மாற்றங்கள் ஏற்பட்டால், மூன்று ஆவணங்கள் தேவைப்படும்.

இந்த  மாற்றங்களை எப்படி செய்வது

  • அதன் Universal Account Number (UAN) மற்றும் பாஸ்வர்டிலிருந்து மெம்பர் சேவா போர்டலில் லோகின்  செய்யவும்.
  • இப்பொழுது  Joint Declaration (JD)டேப்பில் க்ளிக் செய்யவும்.
  • இப்பொழுது ஆதாரில்  ரெஜிஸ்டர் செய்யப்பட  மொபைல் நம்பருக்கு OTP வரும்.
  • OTP போட்ட பிறகு Joint Declaration யின்  போரம் ஸ்க்ரீனில் திறக்கும்.
  • இப்போது தேவையான மாற்றங்களைச் செய்த பிறகு, கோரப்பட்ட ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்கவும்.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :