உங்கள் போனில் இந்த Emergency Alert வந்ததா ? ஏன் அரசு இதை அனுப்பியது ?
வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் நள்ளிரவு 1 மணிக்குள் பலரது ஸ்மார்ட்போன் ஸ்க்ரீனில் பலத்த பீப் சத்தத்துடன் ஒரு மெசேஜ் தோன்றியது
இது இந்திய அரசின் டெலிகாம் துறை செல் ப்ராட்காஸ்டிங் சிஸ்டம் மூலம் அனுப்பிய மாதிரி டெஸ்டிங் மெசேஜ்
இந்த முழு விஷயம் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
உங்கள் மொபைலிலும் 'அவசர எச்சரிக்கை' வந்துள்ளதா? வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் நள்ளிரவு 1 மணிக்குள் பலரது ஸ்மார்ட்போன் ஸ்க்ரீனில் பலத்த பீப் சத்தத்துடன் ஒரு மெசேஜ் தோன்றியது. இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இந்த எச்சரிக்கை ஒளிபரப்பைப் படித்து மக்கள் குழப்பமடைந்துள்ளனர். இது இந்திய அரசின் டெலிகாம் துறை செல் ப்ராட்காஸ்டிங் சிஸ்டம் மூலம் அனுப்பிய மாதிரி டெஸ்டிங் மெசேஜ் என்று அந்தச் மெசேஜில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. இருந்தும் பலரால் இந்தச் செய்தியைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த முழு விஷயம் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
மக்களுக்கு என்ன மெசேஜ் வந்தது
மதியம் 12 மணி முதல் 1 மணி வரை பலத்த பீப்புடன் பளிச்சிட்ட இந்த செய்தி, 'எமர்ஜென்சி அலர்ட்' என்று தொடங்கியது. இது இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை, செல் ப்ராட்காஸ்டிங் சிஸ்டம் மூலம் அனுப்பிய மாதிரி டெஸ்டிங் மெசேஜ் என்று மெசேஜில் ஆங்கிலத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் மெசேஜை புறக்கணிக்கவும், ஏனெனில் இதற்கு உங்கள் முடிவில் இருந்து எந்த எக்சனுசன் தேவையில்லை. (National Disaster Management Authority) தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் பான் இந்தியா எமர்ஜென்சி அலர்ட் சிஸ்டம் டெஸ்டிங் சரிபார்க்க இந்த மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் நோக்கம் பொது பாதுகாப்பை அதிகரிப்பது மற்றும் அவசர காலங்களில் சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை அனுப்புவதாகும்.
மக்களின் போன் ஸ்க்ரீனில் எச்சரிக்கை மெசஜ் தோன்றுவதற்கான காரணம் அதில் எழுதப்பட்டுள்ளது. அதாவது, பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க அரசாங்கம் ஒரு சோதனையை நடத்துகிறது. நேசனல் டிசஸ்தர் மேனேஜ்மென்ட் ஆணையத்தின் ஒத்துழைப்புடன் இந்த பணி நடைபெற்று வருகிறது.
இந்த மேசெஜ்காக நீங்கள் அதிகம் கவலைப்பட தேவையில்லை. இயற்க்கை சூழ்நிலைகளில் ஏற்ப்படும் செதரத்தில் இருந்து மக்களுக்கு உதவுவது NDMA உதரணமாக நிலநடுக்கம் அல்லது வெள்ளம் ஏற்பட்டால் அரசாங்கம் மக்களை சரியான நேரத்தில் எச்சரிக்கும் வகையில் இந்த மெசேஜ் சோதிக்கப்பட்டுள்ளது. மீடியா அறிக்கையின்படி, கடந்த மாதமும் இதுபோன்ற மெசேஜ் பலரின் ஸ்மார்ட்போன்களில் வந்தது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile