விமானத்தில் பயணம் செய்பவர்கள் 3லிருந்து 2 மணி நேரத்துக்கு முன் கூட்டியே சென்று காத்து கொண்டிருக்கும் நிலை ஏற்படுகிறது அது மட்டமல்லாமல் விமான நிலையத்தில் பல சோதனைகளை தாண்டி செல்லும் நிலைமை ஏற்படுகிறது. இதனுடன் சில சமயங்கள் கூட்ட நெரிசல் காரணமாகவும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாக இருக்கிறது.
இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக எலக்ட்ரோனிக் முறையில் பரிசோதனை செய்யும் எண்ட்ரன்ஸ் வாயில்களை பொருத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும் விமான முனையங்களின்எண்ட்ரன்ஸ் பகுதி, பாதுகாப்பு சோதனை பகுதி, விமானங்களுக்கு செல்வதற்கான பகுதி ஆகிய இடங்களில் எலக்ட்ரோனிக் நுழைவுவாயில்கள் அமைக்கப்படும்.
எண்ட்ரன்ஸ் பகுதியில் டிக்கெட்டின் கியூஆர் கோடு, பயணியின் முகம் ஆகியவை ஸ்கேன் செய்யப்படும். இவை, ஏற்கனவே உள்ள தகவல் டேட்டக்களுடன் சரிபார்க்கப்படும்.
இதனைத் தொடர்ந்து, டாக்யூமென்ட்களை சோதனை பகுதி, பாதுகாப்புப் பகுதி, விமானங்களுக்கு செல்லும் வழி ஆகியவற்றுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக டிஜியாத்ரா என்ற வெப்சைட்டில் பதிவுசெய்து, அடையாள நம்பரை பெற வேண்டும்.
அதன் பிறகு, விமான நிலையத்துக்கு முதல்முறை செல்லும்போது, அடையாள நம்பரை வழங்க வேண்டும். பயணியின் போட்டோ மற்றும் கண் கருவிழி மற்றும் ரேகைப் பதிவுகள் செய்யப்படும். இதன்பிறகு பயணம் செல்லும் பயணிகள் எந்தவொரு தாமதமும் இல்லாமல் செல்ல முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதலாவதாக, பெங்களூரு விமான நிலையத்தில் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்த முறை அமல்படுத்தப்படும். இதேபோல, முதல் கட்டத்தில் புனே, வாரணாசி, கொல்கத்தா, விஜயவாடா விமான நிலையங்களில் எலக்ட்ரானிக் எண்ட்ரன்ஸ் பொருத்தப்படும் எனவும் 2- வது கட்டமாக சென்னை விமான நிலையத்தில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் எலக்ட்ரானிக் எண்ட்ரன்ஸ் வாயில்கள் பொருத்தப்படும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.