Driving Licence யில் புதிய விதி வீட்டிலிருந்தபடி அப்ளை செய்தால் உடனே கிடைக்கும் லைசன்ஸ்

Updated on 20-Jun-2024
HIGHLIGHTS

Driving Licence செய்வதற்க்கு ரீஜனல் ஆபிஸ் அதாவது RTO போகவேண்டி இருந்தது

தற்போது டிரைவிங் லைசன்ஸ் விதிகள் மாற்றப்பட்டுள்ளன.

புதிய விதிகள் ஜூன் 1, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன

Driving Licence செய்வதற்க்கு ரீஜனல் ஆபிஸ் அதாவது RTO போகவேண்டி இருந்தது மேலும் RTO ஆபிஸ் பயங்கர கூட்டமாக இருக்கும், இதனால் டிரைவிங் லைசன்ஸ் பெறுவதில் மிகுந்த சிரமம் உள்ளது. இது தவிர, இதற்கு நிறைய நேரமும் பணமும் தேவை. ஆனால், தற்போது டிரைவிங் லைசன்ஸ் விதிகள் மாற்றப்பட்டுள்ளன. புதிய விதிகள் ஜூன் 1, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன. புதிய விதியின்படி ஓட்டுநர் உரிமம் பெற RTO ஆபிஸ் செல்ல வேண்டிய அவசியமில்லை.

டிரைவிங் லைசன்ஸ் தேர்வு தனியார் ஓட்டுநர் பயிற்சி மையத்தில் நடத்தப்படலாம். இதற்கு ஆர்டிஓவிடம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதாவது, தனியார் பயிற்சிப் பள்ளியில் தேர்வு செய்து ஆன்லைன் பார்மை பயன்படுத்துவதன் மூலம் இது மிகவும் வசதியாக இருக்கும்.

இதன் நன்மை என்ன ?

புதிய விதி அமலுக்கு வந்த பிறகு மக்களின் நேரம் மிச்சமாகும். மேலும், ஓட்டுநர் உரிமமும் விரைவில் தயாராகிவிடும். இது தவிர, டிரைவிங் லைசன்ஸ் உருவாக்க உங்களுக்கு மூன்றாம் தரப்பு நபர் தேவையில்லை. டிரைவிங் லைசச்ன் , உருவாக்குவதில் அதிக ஊழல் நடப்பதாக, அதை அகற்ற, அரசு புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் லஞ்சம் கொடுக்காமல் குறைந்த விலையில் ஓட்டுநர் டிரைவிங் லைசன்ஸ் பெற முடியும்.

#Driving Licence யில் புதிய விதி வீட்டிலிருந்தபடி அப்ளை

Driving Licence ஆன்லைனில் எப்படி அப்ளை செய்வது?

  • முதலில் நீங்கள் https://sarathi.parivahan.gov.in/ வேப்சிட் செல்லவும்
  • இதற்குப் பிறகு நீங்கள் உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • இதன் பிறகு New Driving Licence யின் Driving Licence மெனுவிலிருந்து செலக்ட் செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு, உங்கள் லேர்னிங் டிரைவிங் லைசன்ஸ் நம்பரை போட வேண்டும். மேலும், பிறந்த தேதியை உள்ளிட வேண்டும்.
  • அதன் பிறகு நீங்கள் அப்ளிகேசன் பார்மை நிரப்ப வேண்டும்.
  • பிறகு Next என்பதில் க்ளிக் செய்ய வேண்டும்
  • இதன் பிறகு RTO செல்ல வேண்டும் நீங்கள் ஒரிஜினல் டாக்யுமென்ட் மற்றும் கட்டண சீட்டை கொடுக்க வேண்டும்.
  • இதன் பிறகு, தனியார் ஓட்டுநர் பயிற்சி மையத்தில் சோதனை நடத்தி ஓட்டுநர் உரிமம் பெறலாம்.

Driving Licence இல்லாதவர்களுக்கு ஆபரதம்

டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டுபவர்களுக்கு 2000 வரையிலான அபராதம் விதிக்கப்படும்.மேலும், மைனர் வாகனம் ஓட்டுவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர் ரூ.25,000 அபராதம் செலுத்த வேண்டும். மேலும், பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது தவிர வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் ரத்து செய்யப்படும்

இதையும் படிங்க :Spam கால் தொல்லை இனி இருக்காது வருகிறது CNAP காலர் ID

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :