ஸ்மார்ட்போன்களை களவு போகாமல் பார்த்துக் கொள்ள பல்வேறு வழிமுறைகள் இருக்கும் நிலையில், லேப்டாப் அல்லது இதர கேட்ஜெட்களை கண்டறிய போதுமான அளவு சாதனங்களோ வழிமுறைகளோ இல்லை என்றே கூற வேண்டும்.
சுவாரஸ்ய சாதனங்களை அறிமுகம் செய்யும் டிஜிடெக் நிறுவனம் புதிய ஆன்டி-லாஸ்ட் (anti-lost) வயர்லெஸ் டிராக்கர் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனம் கொண்டு களவு போகும் சாதனங்களை பயனர்கள் மிக எளிமையாக கண்டறிய முடியும். இந்த டிராக்கர் டிஜிடெக் டிராக்கர் எனும் செயலியுடன் இணைக்கப்படுகிறது.
டிஜிடெக் டிராக்கர் ஆப் ஆன்ட்ராய்டு கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் இலவசமாக டவுன்லோடு செய்ய முடியும். வெவ்வேறு வடிவமைப்புகளில் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது. இந்த சாதனத்தை கீசெயின், வாலெட், லேப்டாப் மற்றும் இதர சாதனங்களில் இணைத்துக் கொள்ள முடியும்.
மொபைல் செயலியுடன் இணைக்கப்பட்டால், டிராக்கர் இருக்கும் லொகேஷனை கண்டறிய முடியும். ப்ளூடூத் 4.0 கனெக்டிவிட்டி மற்றும் கூடுதல் பேட்டரிகளுடன் கிடைக்கிறது. மின்சாதனங்கள் மட்டுமின்றி இந்த சாதனம் கொண்டு கார்களையும் பாதுகாக்க முடியும்.
இதன் இன்-பில்ட் அலாரம் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்குள் சீராக வேலை செய்யும். இத்துடன் இது வேலை செய்யும் எல்லை அளவுகளை மாற்றியமைக்கவும் முடியும். அதிகபட்சம் 30 மீட்டர்கள் பரப்பளவில் இயங்கும் டிராக்கர் நிர்ணயிக்கப்பட்ட எல்லையை கடக்கும் போது ஸ்மார்ட்போனில் அலாரம் அடிக்கும்.
இத்துடன் இணைக்கப்பட்ட சாதனம் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்கு வெளியே அசைந்தாலும், பயனர்களுக்கு எச்சரிக்கை செய்யப்படுகிறது. டிராக்கர் பயன்படுத்தி, ரிமோட் முறையில் ஸ்மார்ட்போன்களில் புகைப்படங்களை எடுக்கவும் முடியும். புகைப்படம் அல்லது வீடியோக்களை எடுக்க டிஜிடெக் டிராக்கரில் உள்ள பட்டனை அழுத்த வேண்டும்.