டெல்லி: ஐடியா கம்பனி தனது வாடிக்கையாளர்களுக்கு 2 புதிய பிளான்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு தொலைத் தொடர்பு துறையில் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ, பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இலவச அன்லிமிடெட் பிளான் மூலம் கோடிக்கணக்கான கஸ்டமர்களை கவர்ந்தது.
இதை தொடர்ந்து படிப்படியாக பிளான்களுக்கான கட்டணங்களை நிர்ணயிக்கத் தொடங்கியது. இதற்கு போட்டியாக பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களும் ஆஃபர் பிளான்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
ஜியோவுடன் போட்டி போடும் வகையில், ஏர்டெல், BSNL வோடோபோன் ஆகிய நிறுவனங்கள் தொடர்ந்து பல்வேறு ஆஃபர்களை வழங்கி வருகின்றன.