Spam கால் தொல்லை இனி இருக்காது வருகிறது CNAP காலர் ID

Updated on 19-Jun-2024
HIGHLIGHTS

கடந்த சில ஆண்டுகளில் Spam கால்களின் பிரச்சனை வேகமாக அதிகரித்துள்ளது.

டெலிகாம் நிறுவனங்கள் சில இடங்களில் காலர் ஐடி சேவையின் சோதனையைத் தொடங்கியுள்ளன.

நிறுவனங்களுக்கு காலிங் பெயர் விளக்கக்காட்சி (CNAP) அம்சத்தை செயல்படுத்த அழுத்தம் கொடுத்துள்ளன.

கடந்த சில ஆண்டுகளில் Spam கால்களின் பிரச்சனை வேகமாக அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த டெலிகாம் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. ஸ்பேம் கால்களை சமாளிக்க, டெலிகாம் நிறுவனங்கள் சில இடங்களில் CNAP காலர் ஐடி சேவையின் சோதனையைத் தொடங்கியுள்ளன. இந்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மற்றும் டெலிகாம் துறை (DoT) ஆகியவை இந்த நிறுவனங்களுக்கு காலிங் பெயர் விளக்கக்காட்சி (CNAP) அம்சத்தை செயல்படுத்த அழுத்தம் கொடுத்துள்ளன. இதன் மூலம் போலி மற்றும் ஸ்பேம் கால்களை எளிதாக நிறுத்த முடியும்.

CNAP டெஸ்டிங் இந்தியாவில் இரண்டு ரீஜனில் ஆரமபமகிறது

இந்த அம்சம் நாட்டில் முழுமையாக செயல்படுத்தப்பட்டால், கஸ்டமர்களுக்கு மூன்றாம் தரப்பு காலர் அடையாள ஆப்கள் தேவையில்லை. டெலிகாம் நிறுவனங்கள் CNAP காலர் ஐடி காட்சி சேவையின் சோதனையைத் தொடங்கியுள்ளன என்று ஒரு மீடியா அறிக்கை கூறுகிறது.

Spam calls and CNAP

முன்னதாக, நாட்டில் உள்ள அனைத்து மொபைல் போன்களுக்கும் CNAP-ஐ அமல்படுத்த TRAI கேட்டுக் கொண்டது. ஆனால், இதற்கு டெலிகாம் நிறுவனங்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. மும்பை மற்றும் ஹரியானாவில் சிஎன்ஏபியின் வரையறுக்கப்பட்ட சோதனை செய்யப்படுகிறது என்று இந்த அறிக்கை கூறுகிறது. எந்த டெலிகாம் நிறுவனங்கள் இந்த சேவையை சோதனை செய்கின்றன என்று தெரியவில்லை.

இரு Airtel மற்றும் Reliance Jio CNAP அமல்படுத்துவதற்கு எதிராக டெலிகாம் நிறுவனங்கள் எச்சரித்திருந்தன. இதற்கு தனியுரிமைச் சட்டங்களுக்கு இணங்க வேண்டியிருக்கலாம் என்று பார்தி ஏர்டெல் தெரிவித்துள்ளது. இதனால் சிக்னலில் சுமை அதிகரித்து, ஒன்றோடொன்று இணைப்பதில் சிக்கல் ஏற்படும் என ரிலையன்ஸ் ஜியோ எச்சரித்திருந்தது. டெலிகாம் நிறுவனங்கள் கஸ்டமர்களின் பெயர்கள் மற்றும் போன் நம்பர் லிஸ்ட்டை தயாரிக்க வேண்டும், இதனால் இந்த சேவையை எளிதாகப் பயன்படுத்த முடியும் என்றும் TRAI தெரிவித்துள்ளது.

CNAP Caller ID எப்படி வேலை செய்யும்?

CNAP காலர் ஐடி சேவை செயல்படுத்தப்பட்டவுடன், காலரின் போன் நம்பரும் அவரது முழுப் பெயரும் பயனர்களின் மொபைல் போன்களில் தெரியும். இந்த தகவல் கஸ்டமர் அப்ளிகியன் பாரம் மூலம் தெரியும் (CAF) இது ஸ்பேம் மற்றும் ஸ்கேம் கால்களை குறைக்கும். மேலும் இது (KYC) மூலம் வெரிபை செய்யப்படும் இந்தச் சேவையை அனைத்து மொபைல் போன்களிலும் செயல்படுத்துவதில் உள்ள ஒரு சிக்கல், போன் உற்பத்தியாளர்கள் மற்றும் சாப்ட்வேர் வழங்குநர்கள் காலர்களை பற்றிய பெரிய அளவிலான தகவல்களைப் பெறுவதற்கான திறன் ஆகும். ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை கஸ்டமர்களுக்கு CNAP தேர்வு செய்ய வேண்டும் என்றும் பிஸ்னஸ் மற்றும் டெலிமார்க்கெட்டிங் நம்பர்களுக்கு இது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளன.

இதையும் படிங்க TCL யின் இரண்டு புதிய டிவி இந்தியாவில் 32,990 ஆரம்ப விலையில் அறிமுகம்,

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :