Chennai Metro அறிமுகம் செய்தது QR அடிப்படையிலான டிக்கெட் இனி நீண்ட துரம் வரிசையில் நிக்க தேவை இல்லை

Chennai Metro அறிமுகம் செய்தது QR அடிப்படையிலான டிக்கெட் இனி நீண்ட துரம் வரிசையில் நிக்க தேவை இல்லை
HIGHLIGHTS

போன் பே' மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளும்படியான வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

சென்னை மெட்ரோ ரயில் ஸ்டேசன் டிக்கெட் கவுன்டர்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்க்கலாம்

இப்போது PhonePe யின் ஸ்விட்ச் தளத்திலிருந்து நேரடியாக டிஜிட்டல் QR அடிப்படையிலான டிக்கெட்டுகளை புக்கிங் செய்ய முடியும்.

போன் பே’ மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளும்படியான வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் QR அடிப்படையிலான டிக்கெட்டுகளை அதிகாரிகள் அறிமுகப்படுத்துவதன் மூலம், சென்னை மெட்ரோ ரயில் ஸ்டேசன் டிக்கெட் கவுன்டர்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்க்கலாம். சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) இந்த நோக்கத்திற்காக PhonePe உடன் கூட்டு சேர்ந்துள்ளது.

QR கோட் மூலம் டிக்கெட்

அதிகாரபூர்வ படி பயணிகள் இப்போது PhonePe யின் ஸ்விட்ச் தளத்திலிருந்து நேரடியாக டிஜிட்டல் QR அடிப்படையிலான டிக்கெட்டுகளை புக்கிங் செய்ய முடியும். இந்த சேவையில் தற்போதுள்ள 20 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும்.

CMRL நிர்வாக இயக்குநர் M A .சித்திக் வெள்ளிக்கிழமை நந்தனத்தில் QR அடிப்படையிலான டிக்கெட் முறையை அறிமுகப்படுத்தினார். சிங்கிள் பயண டிக்கெட்டுகளை புக்கிங் செய்தல், ரிடர்ன் பயண டிக்கெட்டுகள் மற்றும் ஸ்மார்ட் கார்டுகளை ரீசார்ஜ் செய்தல் ஆகிய மூன்று முக்கிய சேவைகளை PhonePe படிப்படியாக பயணிகளுக்கு செயல்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலவரப்படி, முதல்கட்டமாக சிங்கில் ஜோர்னி டிக்கெட்டுகளுக்கான புக்கிங் செயல்படுத்தப்பட்டுள்ளது, மற்றும் மற்ற இரண்டு சேவைகள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளன.

சென்னை மெட்ரோவுடனான கூட்டு மட்டுமில்லாமல் ஹைதராபாத் மெட்ரோ, மும்பை மெட்ரோ மற்றும் டெல்லி மெட்ரோ ஆகியவற்றுடன் PhonePe இணைத்துள்ளது

இதையும் படிங்க: Cyber Fraud:5ரூபாய் கொடுத்த பாவத்துக்கு பேன் அக்கவுன்டிலிருந்து 80,000ரூபாய் பறிபோனது

பயணிகள் ஒரே போனில் இருந்து ஒரே நேரத்தில் ஆறு நபர்களுக்கு இ-டிக்கெட்டுகளைப் பெறலாம் மற்றும் மெட்ரோ ஸ்டேசன் என்ட்ரி மற்றும் எக்ஸிட் கேட்களில் அதை ஸ்கேன் செய்து தங்கள் பயணத்தை தொடங்கலாம்.

PhonePe மூலம் டிக்கெட் எப்படி புக் செய்வது?

  • PhonePe ஆப்பை திறந்து ஸ்விட்ச் செக்சனுக்கு செல்லவும்
  • டாக்ஸி & மெட்ரோ வகையின் கீழ், சென்னை மெட்ரோ ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்
  • என்டர் மற்றும் டேஸ்டிநேசன் ஸ்டேஷன்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை உள்ளிடவும்
  • அதன் பிறகு UPI மூலம் பணம் செலுத்த வேண்டும்.
  • வெற்றிகரமாகப் பணம் செலுத்தினால், ஃபோன்பே ஆப்யில் டிஜிட்டல் QR கோட் உருவாக்கப்படும், இது பயணத்தை முடிக்க மெட்ரோ ஸ்டேஷன் என்ட்ரி மற்றும் எக்ஸிட் கேட்களில் ஸ்கேன் செய்யப்பட வேண்டும்.

CMRL வெளியிட்டுள்ள டேட்டாக்களின்படி மே 17, 2023 முதல் நவம்பர் 15, 2023 வரை மொத்தம் 9,34,882 பயணிகள் WhatsApp QR கோட் டிக்கெட் சிஸ்டம் பயன்படுத்தியுள்ளனர்.

மேலும், ஆகஸ்ட் 4, 2023 முதல் நவம்பர் 15, 2023 வரை 9,26,301 பயணிகள் Paytm QR கோட் டிக்கெட் சிஸ்டம் பயன்படுத்தியுள்ளனர்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo