மிகவும் சக்தி வாய்ந்த BMW M3 மாடல் கார் அறிமுகம்.

மிகவும் சக்தி வாய்ந்த BMW M3 மாடல் கார் அறிமுகம்.
HIGHLIGHTS

பிஎம்டபிள்யூ நிறுவனம் இதுவரை வெளியிட்டதில் மிகவும் சக்திவாய்ந்த M3 காரை அறிமுகம் செய்து இருக்கிறது.

இந்த காரில் விசேஷ சேசிஸ் மாட்கள் மற்றும் லிமிடெட் ப்ரோடக்ஷன் வேரியண்ட் ஆகும்.

பிஎம்டபிள்யூ நிறுவனம் இதுவரை வெளியிட்டதில் மிகவும் சக்திவாய்ந்த M3 காரை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் DTM ரேஸ் கார் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த காரில் விசேஷ சேசிஸ் மாட்கள் மற்றும் லிமிடெட் ப்ரோடக்ஷன் வேரியண்ட் ஆகும்.

இந்த மாடல்களில் ரிகிட் கிரான்க்-கேஸ், ஐயன்-கோட் செய்யப்பட்ட சிலிண்டர் போர்கள், ஃபோர்ஜ் செய்யப்பட்ட கிரான்க்ஷாஃப்ட், 3டி ப்ரிண்ட் செய்யப்பட்ட ஹெட்-கோர், மேம்பட்ட கூலண்ட் டக்ட்கள் மற்றும் விசேஷ ஆயில் சப்ளை சிஸ்டம் உள்ளிட்டவை அடங்கும். இதன் காரணமாக பிஎம்டபிள்யூ M3 CS மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.4 நொடிகளில் எட்டிவிடும். இதில் உள்ள என்ஜின் அதிகபட்சமாக 640 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

M3 CSL போன்றே புதிய M3 CS மாடலில் உள்ள S58 டுவின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட ஸ்டிரெயிட்-சிக்ஸ் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 542 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. இது M3 காம்படிஷன் மாடலை விட 40 ஹெச்பி அதிகம் ஆகும். இதே என்ஜின் M4 GT3 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், ரேஸ் காரில் ஏராள மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

புதிய M3 CS மாடல் RWD ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. மேலும் இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 302 கிலோமீட்டரில் மின்முறையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. விசேஷ என்ஜின் மவுண்டிங் காரணமாக ஸ்ப்ரிங் ரேட் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கை பொருத்தவரை 19 இன்ச் முன்புறமும், பின்புறம் 20 இன்ச் அளவு கொண்ட கார்பன் செராமிக் யூனிட்கள் ஆகும்.

ஃபோர்ஜ் செய்யப்பட்ட M-ஸ்பெக் அலாய் வீல்கள் மிஷெலின் பைலட் ஸ்போர்ட் 4S டிராக்-ரெடி ரப்பரில் ராப் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார்பன்-ஃபைபர்-ரி-இன்ஃபோர்ஸ் செய்யப்பட்ட பிளாஸ்டிக் வழங்கப்பட்டு இருக்கிறது. பிஎம்டபிள்யூ M3 CS மொத்த எடை 1855 கிலோ ஆகும். இந்த கார் மொத்தத்தில் எத்தனை யூனிட்கள் உற்பத்தி செய்யப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், மார்ச் மாத வாக்கில் இதன் உற்பத்தி துவங்கி, அதன் பின் வினியோகம் செய்யப்பட இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo