தமிழகம் முழுவதும், சாதாரண ரேஷன் கார்டுகள் மாற்றப்பட்டு, உங்கள் கைக்குள் அடங்கும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு இருக்கிறது . ஆதார் நம்பருடன், இணைக்கப்பட்ட, ஒரு கோடியே 96 லட்சம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில், ரேஷன் கடைகளில் தற்போது, பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும் ரேஷன் பொருளை கொண்டு நடக்கும் பல தவறுகளை தடுக்கவே , பயோமெட்ரிக் ரேஷன் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதன்படி, ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே, பொருட்களை வாங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பயோமெட்ரிக் கைவிரல் ரேகை வைத்தால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும்.
ஆதார் அடிப்படையில், ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே அனைவரது கைவிரல் ரேகையும், அரசு வசம் உள்ளது. அதனால் ஸ்மார்ட் கார்டில், பெயர் இடம்பெற்றுள்ளவர்களில் ஒருவரது கைவிரல் ரேகை பதிந்தால் மட்டுமே பொருள் வினியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அடிப்படையில், ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளதால், அனைவரது கைவிரல் ரேகையும், பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கமுடியும். தவறான நபர்களுக்கு, ரேஷன் பொருள் சென்றடைவது தடுக்கப்படும்.
பயோமெட்ரிக் கருவிகள் கொள்முதல் பணிகள் துவங்கியுள்ளன. செப்டம்பர் மாத இறுதியில் பயோமெட்ரிக் முறை, படிப்படியாக அறிமுகமாகவுள்ளதாக பொதுவினியோகத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.