வெஸ்பா எலெட்ரிக்கா இ-ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்

வெஸ்பா எலெட்ரிக்கா இ-ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்
HIGHLIGHTS

இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை பியாஜியோ அறிமுகம் செய்திருப்பதும் இதுவே முதல் முறையாகும்.

இடலியை சேர்ந்த பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான பியாஜியோ இந்தியாவில் தனது புதிய வெஸ்பா எலெட்ரிக்கா ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. 2017 EICMA விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட வெஸ்பா எலெட்ரிக்கா இம்முறை இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. 

இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை பியாஜியோ அறிமுகம் செய்திருப்பதும் இதுவே முதல் முறையாகும். வெஸ்பா எலெட்ரிக்கா மாடலில் 2.6 பி.ஹெச்.பி. முதல் அதிகபட்சம் 5.2 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டிருக்கிறது. 

இதன் எலெக்ட்ரிக் மோட்டார் 4.2 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி மூலம் இயங்குகிறது. இந்த பேட்டரி 1000 முறை சார்ஜ் செய்யும் திறன் கொண்டுள்ளது. 50சிசி ஸ்கூட்டர் வழங்கும் செயல்திறனுக்கு சமமான செயல்திறனை புதிய எலெட்ரிக்கா ஸ்கூட்டர் வெளிப்படுத்தும் என பியாஜியோ தெரிவித்துள்ளது. 

வெஸ்பா எலெட்ரிக்கா இந்தியாவில் ஸ்டான்டர்டு மற்றும் எலெட்ரிக்கா X என இரண்டு வித மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஸ்டான்டர்டு மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. எலெட்ரிக்கா X மாடலை ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று புதிய ஸ்கூட்டர் இகோ மற்றும் பவர் என இரண்டு டிரைவிங் மோட்களை கொண்டுள்ளது. இகோ மோடின் அதிகபட்ச வேகம் மணி்க்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். பவர் மோட் முழுமையான அக்செலரேஷன் வழங்குகிறது. இத்துடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரிவர்ஸ் மோட் வழங்கப்ட்டுள்ளது. 

புதிய எலெட்ரிக்கா ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த வடிவமைப்பு பண்டைய காலத்தில் இருந்ததை போன்று காட்சியளிக்கிறது. எனினும் இதன் அம்சங்கள் இன்றைய காலத்திற்கு ஏற்ப அதிநவீனமாக வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் பிளாக் வைட் ஸ்டைலிங்குடன் புதிய ஸ்கூட்டர் அட்டகாசமாக உருவாக்கப்பட்டுள்ளது. 

இத்துடன் வெஸ்பா எலெட்ரிக்கா மாடலில் 4.3 இன்ச் TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பல்வேறு கனெக்டிவிட்டி ஆப்ஷன்களுடன் வழங்கப்பட்டிருக்கிறது. எல்.இ.டி. ஹெட்லைட், சீட்டின் கீழ் ஸ்டோரேஜ், யு.எஸ்.பி. சாக்கெட், முன்பக்கம் 12 இன்ச் சக்கரமும், பின்புறம் 11 இன்ச் சக்கரமும் வழங்கப்பட்டுள்ளது. இத்தாலியில் தயாரிக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐரோப்பிய சந்தைகளில் இந்த ஆண்டில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.     

வெஸ்பா எலெட்ரிக்கா மாடல் மட்டுமின்றி அப்ரிலியா எஸ்.ஆர். 125 ஸ்கூட்டரை பியாஜியோ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இத்துடன் புதிய ஸ்டார்ம் 125 ஸ்கூட்டரையும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய அப்ரிலியா ஸ்கூட்டர்கள் இந்த ஆண்டு இறுதியில் விற்பனை செய்யப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo