ஆப்பிள் வாட்ச் 3 சீரிஸ் (ஜிபிஎஸ் மற்றும் செல்லுலார்) மாடல் மே மாதம் 11-ம் தேதி இந்தியாவில் வெளியாகும் என ஆப்பிள் அறிவித்துள்ளது.
முன்னதாக ஆப்பிள் வாட்ச் 3 சீரிஸ் ஸ்டான்டர்டு வெர்ஷன் வெளியான நிலையில் தற்சமயம் செல்லுலார் மாடல் வெளியிடப்பட இருக்கிறது. ஏர்டெல் வலைத்தளத்தில் புதிய ஆப்பிள் வாட்ச் 3 சீரிஸ் சாதனத்தை மே 4-ம் தேதி முதல் முன்பதிவு செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏர்டெல் மட்டுமின்றி ரிலையன்ஸ் ஜியோ வெப்சைட்டிலும் மே 4-ம் தேதி முதல் ஆப்பிள் வாட்ச் 3 முன்பதிவு துவங்குகிறது. இதன் விற்பனை ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் ஜியோ ஸ்டோர்களில் மே 11-ம் தேதி முதல் துவங்குகிறது.
புதிய ஆப்பிள் வாட்ச் 3 குறித்து இதெல்லாம் தெரியுமா?
-ஆப்பிள் வாட்ச் 3 செல்லுலார் கனெக்டிவிட்டி அம்சம் ஐபோன் 6 மற்றும் அதன்பின் வெளியிடப்பட்ட ஐபோன் மாடல்களுடன் மட்டுமே வேலை செய்யும். இசிம் தொழில்நுட்பம் கொண்டிருப்பதால் வாட்ச் 3 எந்நேரமும் அருகில் இருக்கும் ஐபோனுடன் இணைந்திருக்கும்.
ஐபோனினை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டால், புதிய வாட்ச் 3 கொண்டு அழைப்புகள், மியூசிக் உள்ளிட்ட சேவைகளை வாட்ச் – கொண்டே பயன்படுத்த முடியும். இசிம் கனெக்டிவிட்டி கொண்டிருப்பதால் புதிய வாட்ச் 3 கையில் மினி ஐபோன் போன்று வேலை செய்யும்.
– ஜியோவின் இந்த சேவை ஐபோன் பயனர்களுக்கும் எவ்வித கூடுதல் கட்டணமின்றி வழங்கப்படுகிறது. இத்துடன் முன்பதிவு செய்வோருக்கு முதல் நாளிலேயே விநியோகம் செய்வதாகவும் ஜியோ அறிவித்துள்ளது.
– ஏர்டெல் சார்பிலும் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் 3 செல்லுலார் மாடலில் ஏர்டெல் சேவைகளை ஆக்டிவேட் செய்ய முதலில் தங்களது ஐபோனினை ஐஓஎஸ் 11.3 மற்றும் வாட்ச் ஓஎஸ் 4.3 இயங்குதளங்களுக்கு அப்டேட் செய்ய வேண்டும். இனி ஐபோனின் செட்டிங்ஸ் — ஜெனரல், — அபவுட் சென்று புதிய கேரியர் செட்டிங்களை தேர்வு செய்ய வேண்டும்.
ஆப்பிள் வாட்ச் 3 இ-சிம் பயன்படுத்தும் என்பதால், தனியாக பிரத்யேக சிம் தேவைப்படாது. ஜியோ அறிவித்திருக்கும் ஜியோஎவ்ரிவேர்கனெக்ட் (JioEverywhereConnect) சேவையை கொண்டு ஒரே ஜியோ நம்பரை கொண்டு ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் சாதனங்களில் பயன்படுத்த முடியும்.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 சாதனத்தில் அப்கிரேடு செய்யப்பட்ட டூயல் கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் 70% வரை வேகமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய W2 வயர்லெஸ் சிப் 85% வரை வேகமான வைபை இணைப்பை வழங்கும். இத்துடன் 50% வரை சீரான ப்ளூடூத் கனெக்டிவிட்டி, வாட்டர் ரெசிஸ்டண்ட் பாடி, 18 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும்.
இந்தியாவில் புதிய ஆப்பிள் வாட்ச் 3 செல்லுலார் மாடலின் விவை அறிவிக்கப்படாமல் உள்ளது. வெளியீட்டுக்கு முன் இதன் விலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.