Apple Saket Store: டீம் குக் ஆப்பிளின் முதல் கடையை டெல்லியில் திறக்கிறது

Updated on 20-Apr-2023
HIGHLIGHTS

Apple First Store in delhi: மும்பையைத் தொடர்ந்து டெல்லியிலும் ஆப்பிள் கம்பெனி இன்று தனது ஸ்டாரயைத் திறந்துள்ளது.

இது நாட்டின் இரண்டாவது அதிகாரப்பூர்வ ஆப்பிள் ஸ்டோர் ஆகும்.

ஆப்பிள் தனது முதல் ஸ்டாரை டெல்லியில் உள்ள சாகேட்டில் உள்ள செலக்ட் சிட்டி வாக் மாலில் இன்று திறந்துள்ளது.

மும்பையைத் தொடர்ந்து இப்போது டெல்லியிலும் ஆப்பிள் ஸ்டோர் வந்துள்ளது. ஆப்பிள் சாகெட் ஏப்ரல் 20 ஆம் தேதி அதாவது இன்று காலை 10 மணிக்கு பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இதை CEO டீம் குக் அவர்களே திறந்து வைத்தார். இந்திய நாட்டில் ஆப்பிள் கம்பெனியின் இரண்டாவது ஸ்டோர் ஆகும். Apple BKC என்ற பெயரில் முதல் ஸ்டோர் மும்பையில் திறக்கப்பட்டது. டில்லி ஹை ஸ்டோர் செலக்ட் சிட்டி வாக் மாலின் முதல் பிளோரில் அமைந்துள்ளது.

ஸ்டோர் திறக்கப்பட்ட அன்று ஆயிரக்கணக்கான மக்கள் ஸ்டோர்க்கு வெளியே நிற்பதைக் காட்டியது. ஆப்பிளின் அதிகாரப்பூர்வ ஸ்டோர் வாடிக்கையாளர்களின் வாங்கும் அனுபவத்தை மேம்படுத்தும். இதனுடன், இந்தியாவில் கம்பெனியின் ஆப்லைன் ரீடைல் மார்க்கெட் அதிகரிக்கும்.

இருப்பினும், மும்பை ஸ்டோரை ஒப்பிடும்போது டெல்லி ஸ்டோர் மிகவும் சிறியது. ஆப்பிளின் அனைத்து தயாரிப்புகளும் இதில் டிஸ்பிளே செய்யப்பட்டுள்ளன மற்றும் எஸ்பிரியன்ஸ் அவற்றை அனுபவிக்க முடியும். Apple BKC போன்று இதிலும் பல சர்வீஸ்கள் வழங்கப்படும். ஆப்பிள் சாகெட் ஸ்டோரில் மொத்தம் 70 ஊழியர்கள் பணியாற்றுவார்கள். இந்த உறுப்பினர்கள் 18 வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மொத்தக் குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு மொத்தம் 15 வெவ்வேறு மொழிகளில் அறிவு உள்ளது. மொத்த உறுப்பினர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள்.

சாகேத் ஸ்டோரில் என்ன கிடைக்கும்?
ஆப்பிள் சாகெட்டில் வடிக்கையாளர்க்ளுக்கு தனிப்பட்ட மற்றும் நேர்மறையான அனுபவத்தைப் பெறுவார்கள். ஸ்டோரின் முன்புறத்தில் ஓகே டேபிள்கள் கொண்டு பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்டோரில் ஐபோன்கள், மேக்புக்ஸ், ஆப்பிள் ஆக்சஸரீஸ், ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் ஆர்கேட் மற்றும் ஆப்பிள் டிவி ஆகியவற்றுக்கு தனித்தனி பிரிவுகள் உள்ளன. இந்த ஸ்டோரில் இந்தியாவில் கிடைக்கும் அனைத்துப் பொருட்களையும் வெளிப்படுத்தலாம். பார்வையாளர்கள் ஸ்டோரில் பொருட்களை வாங்கவும் அனுபவிக்கவும் முடியும்.

கூடுதலாக, ஆப்பிள் சாகெட்டில் ஒரு ஜீனியஸ் பார் உள்ளது, அங்கு வாடிக்கையாளர் ஸ்டோர் ஊழியர்களிடமிருந்து ஆலோசனையைப் பெறலாம். வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் வாங்கும் எந்த ஆப்பிள் ப்ரொடக்டையும் ஸ்டோரில் இருந்து எடுக்கக்கூடிய பிக்அப் ஜோன் ஸ்டோரில் உள்ளது. ஆப்பிள் சாகெட் ஸ்டோர் 100 சதவீதம் ரேணுவெபில் எனெர்ஜில் செயல்படுகிறது மற்றும் கார்பன் நியூட்ரல் ஆகும்.

Connect On :