Apple Event 2023: இன்று அறிமுகத்திற்க்கு ரெடியாகும் iPhone 15 இதோ இங்கே லைவ் பாருங்க
Apple Wanderlust நிகழ்வு இன்று அதாவது 12 செப்டம்பர் 2023 அன்று நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில்iPhone 15 சீரிஸ் உள்ளிட்ட ஆப்பிள் டேப்லெட்டுகள், லேப்டாப்கள் மற்றும் வாட்ச் அறிமுகப்படுத்தப்படலாம்.
ஆப்பிள் நிகழ்வு இந்திய நேரப்படி இன்று இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது
Apple Wanderlust நிகழ்வு இன்று அதாவது 12 செப்டம்பர் 2023 அன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்வில்iPhone 15 சீரிஸ் உள்ளிட்ட ஆப்பிள் டேப்லெட்டுகள், லேப்டாப்கள் மற்றும் வாட்ச் அறிமுகப்படுத்தப்படலாம். இந்த ஆண்டு ஆப்பிள் நிகழ்வு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று நம்பப்படுகிறது, ஏனெனில் ஐபோன் 15 இல் பல பெரிய அப்டேட்கள் கொடுக்கப்படலாம். மேலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஆப்பிள் ஏர் பாட் அறிமுகப்படுத்தப்படும்.
இந்த நிகழ்வு எப்பொழுது நடைபெறும்
ஆப்பிள் நிகழ்வு இந்திய நேரப்படி இன்று இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆண்டு நிகழ்வின் தீம் வொண்டர்லஸ்ட், அதாவது ஆச்சரியங்கள் நிறைந்தது. இதற்காக மக்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர். இந்த தீம் காரணமாக, ஆப்பிள் ஐபோன் 15 இல் பெரிய மாற்றங்கள் காணப்படும் என்று நம்பப்படுகிறது.
இந்த லைவ் நிகழ்வை எங்கு பார்ப்பது
Apple Event 2023 யின் லைவ் ஸ்ட்ரீமிங் ஆப்பில் டிவியில் பார்க்கலாம், இதை தவிர நீங்கள் யூட்யுப் சேனலிலும் லைவ் ஸ்ட்ரீமை பார்க்க முடியும்.
இந்த நிகழ்வில் என்னவெல்லாம் அறிமுகமாகும்.
இந்த நிகழ்வில், ஆப்பிள் iOS 17, iPad 17, WatchOS 10, tvOS 17 ஐ அறிமுகப்படுத்த முடியும், இது இந்த ஆண்டு ஜூன் மாதம் WWDC 2023 யில்அறிமுகப்படுத்தப்பட்டது. ஐபோன் பற்றி நாம் பேசினால், ஐபோன் 15 வரிசை ஸ்மார்ட்போன்களான ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகியவை இன்றைய நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படலாம். இது தவிர, ஆப்பிள் வாட்ச், டேப்லெட் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை அறிமுகப்படுத்தலாம்.
எதிர்பர்க்கபடும் விலை
iPhone 15 Pro ஆனது $999 ஆரம்ப விலையில் வழங்கப்படலாம். ஐபோன் 15 ப்ரோ மாடலின் விலை அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸை அல்ட்ராவுடன் மீண்டும் பிராண்ட் செய்யலாம் என்று தகவல்கள் உள்ளன. ஐபோன் 15ன் அனைத்து மாடல்களிலும் USB-C சார்ஜிங் போர்ட் வழங்கப்படும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile