எது இல்லாமல் இருந்தாலும் போன் இல்லாமல் இருக்க மாட்டேன் என சொல்பவரா அப்போ இது உங்களுக்கு தான்

Updated on 22-Sep-2023
HIGHLIGHTS

இன்றையகாலத்தில் போன் மிக முக்கியமானதாகிவிட்டதால் அதைச் சார்ந்தே நமது ஒவ்வொரு வேலையும் தொடங்கிவிட்டது

உங்கள் போனில் இந்த செட்டிங் செய்வதன் மூலம் உங்கள் மாற்ற வேலையில் கவனமாக இருக்க உதவும்

இந்த அம்சத்தின் பெயர் Focus Mode ஆகும் இதனால் என்ன பயன் முழுசா தெருஞ்சிக்கலம் வாங்க.

இன்றையகாலத்தில் போன் மிக   முக்கியமானதாகிவிட்டதால் அதைச் சார்ந்தே நமது ஒவ்வொரு வேலையும் தொடங்கிவிட்டது. ஆனால் எப்போதும் போனின் பின்னால் இருப்பது நம்மை ஏக்டிவாக இருக்க வைப்பதில்லை நாம் சோம்பேறித்தனத்தால் பல வேலைகள் நடக்காமல் போகிறது  இது போன்ற   பல நிகழ்வு  நம்முள்  பல பேருக்கு  நடந்திருக்கும்  ஏன்  அது உங்களுக்கே  கூட நடந்து இருக்கலாம், நீங்க  உங்கள் போன் பயன்படுத்துவதன் மூலம்  உங்களின் பல வேளைகளில்  கவனம் செலுத்துவதில்லை எனவே நீங்கள் போனை  அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் போனில்  இந்த  செட்டிங் செய்வதன் மூலம் உங்கள் மாற்ற வேலையில் கவனமாக இருக்க உதவும் இந்த அம்சத்தின் பெயர் Focus Mode ஆகும் இதனால் என்ன பயன் முழுசா  தெருஞ்சிக்கலம் வாங்க.

Focus Mode:எப்படி வேலை செய்யும்?

Focus Mode உங்களுக்கு ஒரு  டைமருடன் மற்ற வேளைகளில் கவனம் செலுத்த பயனருக்கு உதவுகிறது. பெயர் குறிப்பிடுவது போல, Focus Mode கவனச்சிதறல்களை அகற்ற உதவுகிறது. டூ நாட் டிஸ்டர்ப் போன்றது. உங்களுக்கு ஒரு ப்ரேக் தேவைப்படும்போது ஃபோகஸ் மோட் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதை மேனுவலாக  ஆண் செய்யலாம்.

இதில், ஃபோகஸ் மோடில் திறக்க முடியாத அல்லது அவற்றின் நோட்டிபிகேசங்களை பார்க்க முடியாத சில ஆப்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு அதிக கவனச்சிதறலை ஏற்படுத்தும் ஆப்களை விரைவாகத் ப்ளாக் செய்வதற்கு இது எளிதான வழியாகும்.

இந்த மோடை குறைந்தபட்சம் 5 நிமிடங்கள் மற்றும் அதிகபட்சம் 3 மணிநேரம் வரை இயக்கலாம். இந்தக் காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்ஸிலிருந்து எந்த நோட்டிபிகேசனயுன் பெறமாட்டீர்கள். ஃபோகஸ் மோடை பிக்ஸட் டைமருடன் பயன்படுத்தலாம். 

Focus Mode:எப்படி பயன்படுத்துவது?

  • முதலில் உங்கள் போனின் செட்டிங்கில் செல்ல வேண்டும்.
  • பிறகு ஸ்க்ரோல் டவுன் செய்யவும் இங்கு உங்களுக்கு Digital Wellbeing and Parental Control யின் ஒப்ஷன் தெரியும்.
  • பிறகு நீங்கள் Focus Mode யில் தட்ட வேண்டும்.
  • இத  பிறகு Distracting Apps செலக்ட் செய்யவும்
  • இப்பொழுது  நீங்கள் தேர்ந்தெடுத்த அனைத்து ஆப்ஸிலும் Turn Off Now மற்றும் ake a Break என்ற ஆப்ஷன் இருக்கும். நீங்கள் ஓய்வு எடுத்தால், நேரத்தை அமைக்கும்படி கேட்கப்படும் இதில் 5 நிமிடம், 15 நிமிடம் மற்றும் 30 நிமிடம் என எதையும் தேர்வு செய்யலாம்.
  • Turn Off நீங்கள் தேர்ந்தெடுத்த ஆப்ஸ் பவுஸ் செய்யப்படும் நீங்கள் அவற்றை திறக்க முடியாது. இருப்பினும், அவர்களின் ஐகானைத் தட்டினால்,  Use App For 5 Mins என பயன்படுத்துவதற்கான விருப்பத்தைப் பெறுவீர்கள்.
  • இந்த மோடனது உங்கள் ஆப்ஸின் கவனச்சிதறலை நீக்குகிறது மற்றும் பிற உற்பத்திப் வேளைகளில் கவனம் செலுத்த உதவுகிறது என்பதை நினைவில் கொள்ளவும். இதன் மூலம், உங்களின் வேளைகளில் கவனம் செலுத்தலாம்.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :