இப்பொழுது வெறும் 999 யில் Amazon Prime ஒரு வருட வேலிடிட்டியுடன் மெம்பர்ஷிப் கிடைக்கும்.

இப்பொழுது வெறும் 999 யில் Amazon Prime ஒரு வருட வேலிடிட்டியுடன் மெம்பர்ஷிப் கிடைக்கும்.
HIGHLIGHTS

அமேசான் பிரைமை வெறும் ரூ.999க்கு அனுபவிக்கலாம்.

அமேசான் அமேசான் பிரைம் லைட்டை பீட்டா பதிப்பில் சோதிக்கிறது

அமேசான் பிரைம் லைட் சந்தா ஆண்டிற்கு ரூ. 999 எனும் விலையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது

அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பை அதிக விலையால் பெற முடியவில்லை என்று நீங்கள் புகார் கூறினால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இப்போது நீங்கள் அமேசான் பிரைமை வெறும் ரூ.999க்கு அனுபவிக்கலாம். உண்மையில் அமேசான் அமேசான் பிரைம் லைட்டை பீட்டா பதிப்பில் சோதிக்கிறது. இது குறைந்த கட்டண பிரைம் சந்தா சேவையாக இருக்கும். டிசம்பர் 2021 இல், Amazon தனது பிரைம் மெம்பர்ஷிப்பின் விலையை 999 ரூபாயில் இருந்து 1,499 ரூபாயாக உயர்த்தியுள்ளது என்பதையும் நினைவூட்டுகிறோம். இந்த விலை ஆண்டு மெம்பர்களுக்கானது .

Amazon Prime Lite யில் என்ன என்ன கிடைக்கும்.

அதன்படி அமேசான் பிரைம் லைட் சந்தா ஆண்டிற்கு ரூ. 999 எனும் விலையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே அமேசான் பிரைம் சந்தா இதே விலையில் வழங்கப்பட்டு வந்தது. எனினும், விலை உயர்வு காரணமாக இது ரூ. 1,499 ஆக மாறி இருக்கிறது. தற்போது புது சந்தா முறை அதன் பீட்டா வெர்ஷனில் தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களிடம் சோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதில் இரண்டு நாட்களில் இலவச டெலிவரி மற்றும் ஒரே நாளில் டெலிவரி போன்ற சேவைகள் சேர்க்கப்பட்டு இருக்கும். அந்த வகையில், இரண்டு நாட்களுக்குள் டெலிவரி வேண்டும் எனில், பயனர்கள் அதற்கான கட்டணத்தை செலுத்த நேரிடும் என்றே தெரிகிறது. இரண்டு நாட்களுக்கு இலவச டெலிவரி மட்டுமின்றி அமேசான் பிரைம் லைட் சந்தாவின் கீழ் பிரைம் வீடியோ தரவுகள் அனைத்தையும் பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது.

எனினும், குறைந்த விலை கொண்ட சேவையில் பயனர்கள் தரவுகளை HD தரத்தில் மட்டுமே ஸ்டிரீம் செய்ய முடியும். இது தவிர ஸ்டிரீம்களின் இடையில் வரும் விளம்பரங்களையும் பார்க்க நேரிடும். அந்த வகையில் புது அமேசான் பிரைம் லைட் விளம்பரங்கள் அடங்கிய குறைந்த விலை சந்தா என எடுத்துக் கொள்ளலாம். அமேசான் பிரைம் லைட் சந்தா ஒரே சமயத்தில் இரு சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். இதில் ஒன்று நிச்சயம் மொபைல் போனாகவே இருக்க வேண்டும்.

புதிய அமேசான் பிரைம் லைட் அறிமுகமானால், அமேசான் பிரைம் சந்தா முறையின் விலை ஆண்டிற்கு ரூ. 1499 என்றும், காலாண்டிற்கு ரூ. 459, மாதத்திற்கு ரூ. 179 மற்றும் அமேசான் பிரைம் லைட் சந்தா ஆண்டுக்கு ரூ. 999 என நிர்ணயம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo