Amazon பயனர்களுக்கு கிடைக்கும் Xmas Gift இந்த வாய்ப்பை பயன்படுத்திகொங்க

Amazon பயனர்களுக்கு கிடைக்கும் Xmas Gift இந்த வாய்ப்பை பயன்படுத்திகொங்க
HIGHLIGHTS

Amazon தற்போது பிரைம் மெம்பர்ஷிப்பை பல்வேறு கட்டண விருப்பங்களுடன் வழங்குகிறது

அமேசான் பிரைம் லைட் என்ற மற்றொரு திட்டத்தைக் கொண்டுள்ளது

ப்ரைம் லைட் ஆரம்பத்தில் ரூ.999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது

Amazon தற்போது பிரைம் மெம்பர்ஷிப்பை பல்வேறு கட்டண விருப்பங்களுடன் வழங்குகிறது. பயனர்கள் 1 மாதத்திற்கு 299 ரூபாய்க்கும், 3 மாதங்களுக்கு 599 ரூபாய்க்கும், வருடாந்திர திட்டம் 1499 ரூபாய்க்கும் வாங்க விருப்பம் உள்ளது.

அமேசான் பிரைம் லைட் என்ற மற்றொரு திட்டத்தைக் கொண்டுள்ளது, இது ஜூன் மாதம் ரூ.999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், இந்த திட்டத்தின் விலையில் நிறுவனம் சில மாற்றங்களைச் செய்துள்ளதாகத் தெரிகிறது.

Amazon Prime Lite Subscription Price Cut

ப்ரைம் லைட் ஆரம்பத்தில் ரூ.999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் வழக்கமான பிரைம் மெம்பர்ஷிப்பை விட சற்று குறைவான பலன்களுடன் வருகிறது. தற்போது, ​​அமேசான் பிரைம் சப்போர்ட் பக்கத்தில் ரூ.799க்கு பிரைம் லைட் மெம்பர்ஷிப்பை லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

லிஸ்டின் படி, இ-காமர்ஸ் தளம் இந்த மெம்பர்ஷிப் விலையை ரூ.200 குறைத்துள்ளது. இருப்பினும், மற்ற மெம்பர் திட்டங்களின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை. இது விலை மட்டும் மாறவில்லை, அமேசான் இந்த திட்டத்தில் வரும் சில நன்மைகளையும் மாற்றியுள்ளது.

இதன் நன்மையில் என்ன மாற்றம் இருக்கும் ?

Prime Lite மெம்பர்ஷிப் பல நன்மைகளை வழங்குகிறது. இருப்பினும், அமேசான் இந்த திட்டத்தை குறைந்த விலையில் மாற்றுவதற்கு இந்த மாற்றங்களைச் செய்துள்ளது:

முன்னதாக, இந்த திட்டத்தில் இரண்டு நாள் டெலிவரி இலவசம். இப்போது, ​​இந்தத் திட்டத்தில் ஒரு நாள் டெலிவரி, இரண்டு நாள் டெலிவரி, திட்டமிடப்பட்ட டெலிவரி மற்றும் ஒரே நாள் டெலிவரி போன்ற பலன்கள் உள்ளன. பிரைம் மியூசிக் இன்னும் இதில் கிடைக்கவில்லை மற்றும் பிரைம் வீடியோ HD குவாலிட்டியில் மட்டுமே உள்ளது. மேலும், இந்த திட்டம் இப்போது இரண்டு போன்களுக்கு பதிலாக ஒரு டிவைஸ்களில் மட்டுமே சப்போர்ட் செய்கிறது

மீதமுள்ள பலன்கள் முன்பு போலவே இருக்கும். ஒவ்வொரு பொருளுக்கும் 175 ரூபாய் காலை டெலிவரி, நோ-காஸ்ட் EMI மற்றும் 6 மாதங்கள் இலவச ஸ்க்ரீன் மாற்றுதல் போன்றவை இதில் அடங்கும்.

இதையும் படிங்க Oppo A59 5G அறிமுகமகுமுன்னே பல தகவல் லீக்

வழக்கமான பிரைம் மெம்பர்ஷிப்புடன் ஒப்பிடும்போது, ​​இந்தத் திட்டம் ஒவ்வொரு பொருளுக்கும் காலை டெலிவரி தள்ளுபடி, அன்லிமிடெட் பிரைம் வீடியோ சப்போர்ட் மற்றும் 4K ரெசல்யூஷன் ரேசளுயுசன் போன்ற பலன்களை வழங்காது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo