ஜியோவுக்கு போட்டியாக IPL போட்டிகளை லைவ் இலவசமாக வழங்கும் ஏர்டெல்

ஜியோவுக்கு போட்டியாக IPL போட்டிகளை லைவ் இலவசமாக வழங்கும் ஏர்டெல்
HIGHLIGHTS

ஏர்டெல் டிவி செயலியின் புதிய பதிப்பில் ஐபிஎல் 2018 அனைத்து போட்டிகளும் நேரலையில் இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்யும் வசதி வழங்கப்பட இருக்கிறது.

ஏர்டெல் நிறுவனத்தின் பிரபல வீடியோ ஸ்ட்ரீமிங் செயலியான (App ) ஏர்டெல் டிவி, ஹாட்ஸ்டார் உடன் இணைந்து விரைவில் துவங்க இருக்கும் ஐபிஎல் 2018 கிரிகெட் போட்டித்தொடரின் அனைத்து போட்டிகள் மற்றும் போட்டியின் சிறப்பு நிகழ்வுகளை நேரலையில் (live ) இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்யும் வசதியை வழங்க இருக்கிறது. 

புதிய வசதி மட்டுமின்றி ஏர்டெல் செயலியின் புதிய அப்டேட்டை யும் ஏர்டெல் அறிமுகம் செய்ய இருக்கிறது. செயலியின் புதிய பதிப்பில் அனைத்து நேரலை நிகழ்வுகளுக்கும் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக கிரிக்கெட் பிரிவையும் உள்ளடக்கியிருக்கிறது.

ஏர்டெல் டிவி பயனாளிகள், தங்களுக்கு பிடித்தமான அணிகளை தேர்வுசெய்து அவைகளின் செயல்பாடுகளை தொடர்ந்து அறியலாம்; நடப்பு போட்டிகளின் விவரங்களை காணலாம் ஏர்டெல் டிவி செயலியை விட்டு விலகாமலே வரயிருக்கும் போட்டிகளின் கால அட்டவணையை அலசி ஆராயலாம்.

பயனர்களுக்கு கிரிகெட் பார்க்கும் தூரத்தில் இருப்பதை மட்டுமே உறுதிசெய்ய சிறப்பு ஸ்கோர்கார்டு அறிவிக்கைகளும் இதில் இருக்கும். இச்செயலியின் புதிய பதிப்பானது அற்புதமான பரிசுகளை வழங்கும் போட்டிகள் மற்றும் இன்ட்ராக்ட்டிவ் கேம்களையும் கொண்டிருக்கும்.

IPL போட்டித்தொடரின் அனைத்து நிகழ்ச்சிகளையும் இலவசமாக வரம்பின்றி ஸ்ட்ரீமிங் செய்ய என்ன செய்ய வேண்டும்:

– ஏர்டெல் டிவி செயலியின் புதிய பதிப்பினை ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தங்களின் மொபைலில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

– புதிய பயனர்களும் இச்செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம், ஏற்கனவே இதை உபயோகிக்கும் பயனாளிகள், இதற்காக செயல்ப்படுத்தப்பட இருக்கும் அறிவிப்புகளை பெறுவார்கள்.

2018, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களின்போது இந்தியாவில் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்ட வீடியோ செயலி என்ற பெருமை ஏர்டெல் டிவி செயலி பெற்றிருக்கிறது. 2018, ஜூன் மாதம் வரை ஏர்டெல்-ன் போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் டிவி செயலியின் அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. 

ஐபிஎல் போட்டிகளை நேரலையில் காண வகை செய்யப்பட்டிருப்பதன் மூலம், லைவ் டிவி மட்டுமின்றி திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், நெடுந்தொடர்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுக்கான அமைவிடமாக ஏர்டெல் டிவி செயலி இருக்கிறது.

முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஜியோ கிரிகெட் பிளே, ஜியோ கிரிகெட் சீசன் பேக் மற்றும் ஜியோ தண் தணா தண் நேரலை காமெடி நிகழ்ச்சி உள்ளிட்ட புதிய சேவைகளை அறிவித்தது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo