ஏர்டெல் 4G ஹாட்ஸ்பாட் டிவைஸ் மற்றும் 4G டாங்கிள் ஆகியவற்றின் விலை 50% குறைப்பு
ஏர்டெல் 4G ஹாட்ஸ்பாட் டிவைஸ் மற்றும் 4G டாங்கிள் ஆகியவை 999 ரூபாய்க்கு கிடைக்கின்றன. இந்த தள்ளுபடி 4G ஹாட்ஸ்பாட் மட்டுமே ஏர்டெலின் போஸ்ட் பெயிட் கஸ்டமர்களுக்கு மட்டுமே இருக்கிறது .
ஏர்டெல் புதிய 4G ஹாட்ஸ்பாட் டிவைஸில் , 4G டாங்குலிலும் 50 சதவீத தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. 44G ஹாட்ஸ்பாட் டிவைஸ் ஏர்டெல் வெப்சைட்டில் 999 ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த டிவைஸில் முந்தைய விலை ரூபாய்1,950 ஆகும். 4G டாங்கிள் விலை 1,950 ரூபாயிலிருந்து 999 ரூபாயாக குறைந்துள்ளது.
ஏர்டெல் 4G ஹாட்ஸ்பாட்டை வாங்குவதற்கு முன் சில பயனர்கள் அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அறிந்து கொள்ள வேண்டும். இந்த சலுகை குறிப்பாக ஏர்டெல் போஸ்ட் பெயிட் கஷ்டநர்களுக்கு உள்ளது. இதற்காக, பயனர்கள் ரூபாய் 501 ஐ முன்பணமாக செலுத்த வேண்டும், இது பயனரின் முதல் அல்லது இரண்டாவது பில்லில் கிடைக்கும். இந்த தள்ளுபடி சலுகை ரூ. 499 அல்லது அதற்கும் மேலாக ஒரு ரீசார்ஜ் திட்டத்துடன் பயனர்கள் இந்த சாதனத்தை வாங்கும்போது மட்டுமே செல்லுபடியாகும். அத்தகைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஏர்டெல் 4G டாங்கிள் மீது இல்லை.
ஒரே நேரத்தில் 10 டிவைஸ்களை இணைப்பதன் மூலம் ஏர்டெல் இன் 4G ஹாட்ஸ்பாட் Wi-Fi உடன் கனெக்ட் செய்வதன் மூலம் பயன்படுத்தலாம். இந்த டிவைஸை ஒரு முறை சார்ஜ் செய்வதன் மூலம் 6 மணி நேரம் வரை பயன்படுத்தலாம் என்று நிறுவனம் கூறுகிறது. பிளஸ் இந்த சாதனத்தில் 3G மற்றும் 2G இணைப்பு விருப்பங்கள் உள்ளன.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile