டெலிகாம் ரெகுலேட்டரி அதாரிட்டி ஆப் இந்தியா (TRAI) யின் டிசம்பர் 1 முதல் அத்தியாவசிய நெட் பேங்கிங் மற்றும் ஆதார் OTP மெசேஜ்களை வழங்குவதில் தாமதம் ஏற்படாது என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அப்டேட்டை டிராய் வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் OTP மெசேஜ்களை வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என கடந்த சில நாட்களாக சோசியல் மீடியா வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
இதுபோன்ற செய்திகளை சரியான நேரத்தில் வழங்குவதில் எந்தத் தடையும் இருக்காது என்று TRAI தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களில், அதிகரித்து வரும் சைபர் கிரைம் சிக்கலைத் தடுக்க டெலிகாம் ஒழுங்குமுறை நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக போலி கால்கள் மற்றும் போலி மெசேஜ் ப்ளாக் செய்வது போன்றவை இதில் அடங்கும்.
இதற்காக அக்டோபர் 1ம் தேதி முதல் புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டன. டெலிகாம் நிறுவனங்களுக்கான மொத்த மேசெஜ்களின் தொடக்கத்தைக் கண்காணிப்பதற்கான ஒரு அமைப்பை உருவாக்குவது இதில் அடங்கும். இந்த விதிகளை அமல்படுத்துவதற்கான காலக்கெடு அக்டோபர் 31 ஆகும், ஆனால் டெலிகாம் நிறுவனங்களின் கோரிக்கையை அடுத்து, TRAI அதை நவம்பர் 30 வரை நீட்டித்தது. தொழில்நுட்ப சவால்களை காரணம் காட்டி டெலிகாம் நிறுவனங்கள் காலக்கெடுவை நீட்டிக்க கோரியிருந்தன.
சமிபத்தில் TRAI இடம் டெலிகாம் நிறுவனங்கள் அன்ரெஜிஸ்டர் காலர்சிலிருந்து ப்ரோமொசனால் கால்களை நிறுத்த வலியுறுத்தினர், இதனுடன், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஸ்பேம் அழைப்புகளை பிளாக்லிஸ்ட் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டன. TRAI உத்தரவுப்படி, நாட்டில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பதிவு செய்யப்படாத டெலிமார்க்கெட்டர்கள் அல்லது பதிவு செய்யப்படாத அனுப்புநர்களிடமிருந்து முன் பதிவு செய்யப்பட்ட, கணினி மூலம் உருவாக்கப்பட்ட அல்லது பிற வகையான ஸ்பேம் அழைப்புகளை நிறுத்த வேண்டும். இந்த விதியை மீறுபவர்களுக்கு பின்விளைவுகளும் முடிவு செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்யப்படாத டெலிமார்க்கெட்டர் ஸ்பேம் அழைப்புகளில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால், அவர் தனது தொலைபேசி இணைப்புகளை இழக்க நேரிடும் என்று TRAI இன் அறிவுறுத்தல்கள் கூறுகின்றன.
ஸ்பேம் அழைப்புகளின் சிக்கலைத் தடுக்க, டிராய் பிளாக்செயின் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. ஸ்பேம் அழைப்புகளை அனுப்புபவரின் தடுப்புப்பட்டியலில் தொடர்புடைய தகவல்கள் பிற அணுகல் வழங்குநரிடமிருந்து (OAP) பிற அனைத்து அணுகல் வழங்குநர்களுக்கும் 24 மணி நேரத்திற்குள் பெறப்படும். இதற்குப் பிறகு, ஸ்பேம் கால்களை அனுப்புபவரின் அனைத்து டெலிகாம் இணைப்புகளும் துண்டிக்கப்படும். இது தவிர, இந்த அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் ரெஜிஸ்டர் செய்யப்படாத டெலிமார்க்கெட்டர்கள் பிஸ்னஸ் வொயிஸ் அழைப்புகளை TRAI இன் பிளாக்செயின் தளத்திற்கு மாற்றுவார்கள்.