HIGHLIGHTS
ரேஷன் கார்டுடன் ஆதார் நம்பரை இணைப்பதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30, 2023 வரை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
இந்த காலக்கெடு 30 ஜூன் 2023 வரை இருந்தது
ரேஷன் கார்டுகளை வைத்திருப்பதைத் தடுக்கும் நோக்கத்தில் ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்க வேண்டும்
ரேஷன் கார்டுடன் ஆதார் நம்பரை இணைப்பதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30, 2023 வரை மத்திய அரசு அதிகரித்துள்ளது. முன்னதாக இந்த காலக்கெடு 30 ஜூன் 2023 வரை இருந்தது. இந்த உத்தரவு தொடர்பான அரசின் அறிவிப்பை உணவு மற்றும் பப்ளிக் டிஸ்ட்ரிபியூஷன் துறை வெளியிட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட ரேஷன் கார்டுகளை வைத்திருப்பதைத் தடுக்கும் நோக்கத்தில் ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது.
உண்மையில், பப்ளிக் டிஸ்ட்ரிபியூஷன் முறையின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளில் இருந்து ரேஷன் கார்டுகள் மூலம் அனைத்து பிபிஎல் குடும்பங்களுக்கும் அரசாங்கம் தானியங்கள் மற்றும் மண்ணெண்ணெய் குறைந்த விலையில் வழங்குகிறது. பாஸ்போர்ட், ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையைப் போலவே, ரேஷன் கார்டும் மக்களின் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக செயல்படுகிறது. பலர் ஒன்றுக்கு மேற்பட்ட ரேஷன் கார்டுகளை வைத்து அதிக ரசனை வாங்கி வெளியே அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள் இதை தடுக்க இது கொண்டு வரப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டுடன் ஆதாரை லிங்க் செய்த்து பிறகு, ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ரேஷன் கார்டுகளை வைத்திருக்க முடியாது. மேலும் எந்த ஒரு நபரும் அவருக்கான லிமிட்டுக்கு மேல் அதிகமாக ரேஷன் எடுக்க முடியாது. இதன் மூலம், ஏழைகளுக்கு மட்டுமே மானியத்தில் உணவு தானியங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
ஆதார்- ரேஷன் கார்ட் ஆன்லைனில் எப்படி லிங்க் செய்வது
- ரேஷன் கார்டு காப்பியுடன், ரேஷன் கார்டில் உள்ள உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்ட் காபி , குடும்பத் தலைவரின் பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றை அரசு ரேஷன் கடையில் சமர்ப்பிக்கவும்.
- ஆதார் டேட்டாபேஸின் தகவலை சரிபார்க்க, நீங்கள் பிங்கர்ப்ரின்ட் வழங்க வேண்டும்.
- இதற்குப் பிறகு, அதிகாரப்பூர்வ ஆவணத்தை ப்ரோசெச பிறகு, உங்கள் ரேஷன் கார்டு ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை அறிவீர்கள்..
- முதலில் பொது விநியோக அமைப்பின் போர்ட்டலுக்குச் செல்லவும்.
- அதன் பிறகு, ஆதார் கார்ட் , ரேஷன் கார்டு நம்பர் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரை உள்ளிடவும்.
- Continue பட்டனை கிளிக் செய்யவும்
- ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் போனில் OTP பெறுவீர்கள்
- OTPயை எழுதிய பிறகு, ரேஷன் மற்றும் ஆதார் அட்டை இணைப்பைக் கிளிக் செய்யவும்
Sakunthalaசகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.