Voter ID கார்டை ஆதாருடன் இணைக்க தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு பரிந்துரை செய்துள்ளது. இது ஒரு கட்டாய செயல்முறை அல்ல ஆனால் நீங்கள் தேர்தலில் மோசடி செய்ய விரும்பவில்லை என்றால், நீங்கள் வாக்காளர் அடையாளத்தை ஆதாருடன் இணைக்க வேண்டும். இது நியாயமான தேர்தலை நடத்த உதவும். இதனால்தான் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
Step 1: முதலில் NVSP யின் அதிகாரபூர்வ போர்ட்டல் https://www.nvsp.in/ அல்லது பிறகு வோட்டர் சர்விஸ் போர்ட்டல் https://voters.eci.gov.in/ யில் சென்று லோகின் மற்றும் சைன் அப் செய்ய வேண்டும்
Step 2: நீங்கள் ரெஜிஸ்ட்டர் செய்திருந்தால், மொபைல் நம்பர் பாஸ்வர்ட் மற்றும் கேப்ட்சா கோடை உள்ளிடவும். இதற்குப் பிறகு அக்கவுன்ட் லோகின் செய்வதற்க்கு OTP ஐ உள்ளிடவும். நீங்கள் பதிவு செய்யவில்லை என்றால், ‘Sign-up’ என்பதைக் கிளிக் செய்யவும். அதன் பிறகு, மொபைல் நம்பர் மற்றும் கேப்ட்சா கோடை உள்ளிட்டு, Continue என்பதைக் கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, உங்கள் பெயர் மற்றும் பாஸ்வர்டை உள்ளிட்டு OTT ஐ உள்ளிடவும். பின்னர் உங்கள் மொபைல் நம்பருக்கு ஒன் டைம் பாஸ்வர்ட் அனுப்பப்படும். இதற்குப் பிறகு, பதிவு செயல்முறை முடிவடையும்.
Step 3: கீழே ஸ்க்ரோல் செய்து ஆதார் சேகரிப்பு விருப்பத்தை கிளிக் செய்து Form 6B ஐ நிரப்பவும். இதற்குப் பிறகு ஆதார் மற்றும் தேர்தல் போட்டோ அடையாள அட்டை தேவைப்படும்.
Step 4: இதற்குப் பிறகு, உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் பதிவு செய்யப்பட்ட EPIC நம்பரை உள்ளிடவும். இதற்குப் பிறகு ‘Verify & Fill Form’ என்பதைக் கிளிக் செய்யவும்.
Step 5: இதற்குப் பிறகு, உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுத்து போர்ம்மை நிரப்பவும்.
Step 6: பிறகு ‘Next’ஆப்சனில் க்ளிக் செய்யவும், பிறகு ‘Form 6B’தேவையான ஆவணங்களை நிரப்பவும்.
இதையும் படிங்க: Amazon Holi Store Sale 2024: ஸ்மார்ட்போன்களில் அதிரடி தள்ளுபடி
குறிப்பு – அத்தகைய செயல்முறை முடிந்ததும், உங்கள் வாக்காளர் அடையாள அட்டை ஆதாருடன் இணைக்கப்படும்.