(UIDAI) அதன் இலவச ஆதார் கார்ட் ஆன்லைன் தேதி ஜூன் 14, 2024 வரை நீடிக்கப்பட்டுள்ளது
நீங்கள் 10 ஆண்டுகளாக நீங்கள் அப்டேட் செய்யாமல் இருந்தால் ஜூன் 14, 2024க்குள் அப்டேட் செய்யலாம்.
அதற்க்கு மேல் நீங்கள் ஆதார் கார்ட் அப்டேட் 50 ரூபாய் கொடுக்க வேண்டி இருக்கும்
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அதன் இலவச Aadhaar card ஆன்லைன் தேதி ஜூன் 14, 2024 வரை நீடிக்கப்பட்டுள்ளது நீங்கள் 10 ஆண்டுகளாக நீங்கள் அப்டேட் செய்யாமல் இருந்தால் ஜூன் 14, 2024க்குள் நீங்கள் இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம். அதற்க்கு மேல் நீங்கள் ஆதார் கார்ட் அப்டேட் 50 ரூபாய் கொடுக்க வேண்டி இருக்கும்
Aadhaar card அப்டேட் ஆன்லைனில் மாற்றம் ஏற்ப்பட்டது ஏன்
ஆதாரை இலவசமாகப் அப்டேட் செய்வதற்க்கான காலக்கெடு டிசம்பர் 15, 2023 ஆகும், இது மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டு ஜூன் 14, 2024 வரை நீட்டிக்கப்பட்டது, இதனால் அதிகமான ஆதார் பயனர்கள் இலவசச் சேவையை அனுபவிக்க முடியும்.
இதில் எந்த சேவை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம்.
UIDAI வெப்சைட்டிற்கு சென்று ஜூன் 14ஆம் தேதிக்குள் ஆதார் பெயரையும் முகவரியையும் பயனர்கள் மாற்றிக்கொள்ளலாம். இந்த வேலையை பொது சேவை மையத்தில் அதாவது CSC யிளிர்து செய்ய முடியும். இருப்பினும், நீங்கள் CSC யில் 50 ரூபாய் செலுத்த வேண்டும், அதேசமயம் நீங்கள் myAadhaar போர்ட்டல் மூலம் ஆதாரை இலவசமாக அப்டேட் செய்யலாம்.
Address proof ஆதார் கார்டில் எப்படி அப்லோட் செய்வது?
முதலில் https://myaadhaar.uidai.gov.in/ க்குச் செல்லவும். பின்னர் லோகின் செய்த பின்னர் பெயர், பாலினம், பிறந்த தேதி மற்றும் முகவரி அப்டேட்டை தேர்ந்தெடுக்கவும். இதற்குப் பிறகு, ஆதார் ஆன்லைன் விருப்பத்தை அப்டேட் செய்யவும்.
நீங்கள் முகவரி விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, Proceed to update Aadhaa என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
இதற்குப் பிறகு, டாக்யுமேண்டின் ஸ்கேன் செய்யப்பட்ட காப்பி மற்றும் பிங்கர்ப்ரின்ட் மற்றும் ஐரிஷ் ஸ்கேன் தகவல்களை உள்ளிட வேண்டும்.
ஆன்லைனில் ஆதார் அப்டேட் எப்படி செய்வத்?
இதற்கு, முதலில் நீங்கள் UIDAI வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும், அதாவது uidai.gov.in, இங்கே நீங்கள் விரும்பும் மொழியைத் தேர்வு செய்யலாம்.
இப்போது நீங்கள் அப்டேட் அம்சத்திற்கு செல்ல வேண்டும், இங்கே நீங்கள் My Aadhaar தாவலைக் கிளிக் செய்து உங்கள் ஆதார் விருப்பத்தை அப்டேட் செய்ய
இப்போது நீங்கள் ஒரு புதிய பக்கத்திற்குச் செல்லப் செல்லலாம் இங்கே அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, நீங்கள் அப்டேட் டாக்யுமென்ட் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது நீங்கள் உங்கள் UID மற்றும் கேப்ட்சா கோடை உள்ளிட வேண்டும், இங்கே நீங்கள் அனுப்பு OTP என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
லோகின் செய்வதற்க்கு இந்த OTP பயன்படுத்த வேண்டும். இப்போது நீங்கள் அப்டேட் செய்ய விரும்பும் தகவலைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
உங்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி போன்றவற்றை நீங்கள் புதுப்பிக்கலாம். நீங்கள் புதுப்பிக்க விரும்புவதைப் பற்றிய சரியான தகவலை உள்ளிடவும்.
இப்போது நீங்கள் எல்லா மாற்றங்களையும் செய்த பிறகு, நீங்கள் சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும், ஆனால் அதற்கு முன் நீங்கள் புதுப்பிக்க விரும்பும் ஆவணங்களை உள்ளிட வேண்டும்.
இப்போது இந்த பார்மை பூர்த்தி செய்து அனுப்பும் போது, உங்களுக்கு URN நம்பர் கிடைக்கும். இதன் மூலம் உங்கள் அப்ளிகேசன் ஸ்டேட்டஸ் நீங்கள் சரிபார்க்கலாம்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.