மீண்டும் FREE Aadhaar Update தேதியை நீடித்துள்ளது கடைசி தேதி எப்போன்னு தெரியுமா

Updated on 14-Mar-2024
HIGHLIGHTS

Aadhaar விவரங்களை இலவசமாக அப்டேட்டிர்க்கான கடைசி தேதியை ஜூன் 14 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது

இந்த காலக்கெடு மார்ச் 14 ஆக இருந்தது, இது இப்போது தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 14 ஆம் தேதி வரை My Aadhaar போர்ட்டலில் மட்டுமே இந்த சேவை கிடைக்கும்

Aadhaar விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான கடைசி தேதியை ஜூன் 14 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. முன்னதாக இந்த காலக்கெடு மார்ச் 14 ஆக இருந்தது, இது இப்போது தனித்துவ அடையாள ஆணையத்தால் (யுஐடிஏஐ) ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 14 ஆம் தேதி வரை My Aadhaar போர்ட்டலில் மட்டுமே இந்த சேவை கிடைக்கும் என்றும் ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக UIDAI கூறியது, “குடிமக்களிடமிருந்து பெறப்பட்ட நேர்மறையான பதிலின் அடிப்படையில், இந்த வசதியை 3 மாதங்களுக்கு 15 டிசம்பர் 2023 முதல் 14 மார்ச் 2024 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, myAadhaar போர்ட்டல் மூலம் டாக்யுமேன்ட்களை அப்டேட் செய்யும் வசதி இலவசமாக தொடரும்.

Aadhaar Card Update:இலவச அப்டேட்டில் என்ன என்ன செய்யலாம்.

UIDAI வெப்சைட்டிலிருந்து இருந்து பெயர், முகவரி மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களை இலவசமாகப் அப்டேட் செய்யலாம் இருப்பினும், இந்த அப்டேட் செய்யும்போது இந்த சர்விஸ் சென்டரில் (CSC) பிசிக்கல் முறையில் செய்யலாம், ஆனால் அதற்கு நீங்கள் ரூ 50 செலுத்த வேண்டும்.

ஆதார் கார்ட் ஆன்லைன் இலவச அப்டேட் எப்படி செய்வது?

  • UIDAI யின் அதிகாரபூர்வ வெப்சைட் https://uidai.gov.in/ யில் செல்லவும்.
  • உங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சாவை உள்ளிட்டு, ‘சென்ட் OTP’ என்பதைக் கிளிக் செய்யவும், அது உங்கள் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரில் பெறப்படும்.
  • இதன் பிறகு Update Demographics Data மற்றும் பொருத்தமான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்
  • Proceed யில் க்ளிக் செய்யவும் மற்றும் தேவையான டாக்யுமேன்ட்களை டவுன்லோட் செய்யலாம்.
  • இறுதியாக, அனைத்து விவரங்களையும் சரிபார்த்து, Submitஎன்பதைக் கிளிக் செய்யவும்.
  • ஆதாரில் செய்யப்பட்ட இந்த மாற்றங்களைக் கண்காணிக்க, நீங்கள் ‘அப்டேட் கோரிக்கை எண் (URN)’ ஐப் பயன்படுத்தலாம்.

UIDAI ஆனது ஆதார் பயனர்களின் அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று (PoI/PoA) ஆவணங்களை பதிவேற்றம் செய்யும்படி வலியுறுத்துகிறது, இதனால் அவர்களின் மக்கள்தொகை விவரங்கள் மீண்டும் சரிபார்க்கப்படும். 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் வழங்கப்பட்டு, அதன்பிறகு புதுப்பிக்கப்படாமல் இருந்தால் இது பொருந்தும்.

இதையும் படிங்க:108MP கேமராவுடன் Poco ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் விலை மற்றும் அம்சங்களை பாருங்க

Address Proof எப்படி அப்லோட் செய்வது?

  • ஆதார் வெப்சைட் https://myaadhaar.uidai.gov.in யில் செல்லவும்.
  • பிறகு லோகின் செய்து “Name/Gender/Date of Birth & Address Update” என்ற ஆப்சனை தேர்ந்டுக்கவும்.
  • இதன் பிறகு “Update Aadhaar Online” யில் க்ளிக் செய்யவும் மற்றும் ‘address’ என்பதை தேர்ந்டுக்கவும்.
  • இறுதியாக Proceed to Update Aadhaar’ யில் க்ளிக் செய்யவும் மற்றும் ஸ்கேன் செய்யப்பட்ட டாக்மேன்ட்களின் காபியை அப்லோட் செய்யவும்.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :