சந்தையில் இப்பொழுது ஒரு புதிய ஆன்லைன் ஸ்கேம் நடப்பதை பார்த்து வருகிறோம், இதே போன்ற ஒரு ஸ்கேம் சந்தீகத் செக்ட்டர் 11 யில் வசிக்கும் ஒரு பெண்ணிடம் நடந்தது. அலெற பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு போலி குற்றப்பிரிவு அதிகாரியிடமிருந்து கால் வருகிறது, அதில் உங்கள் Aadhaar கார்டுடன் இணைக்கப்பட்ட சிம் கார்டைப் பயன்படுத்தி சட்டவிரோத பணமோசடி சம்பவங்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் மீது 24 பணமோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பதிலாக, 80 லட்சம் ரூபாய் கோரிக்கை வைக்கப்பட்டு, அது சிறப்பு பேங்க் அக்கவுண்டிற்கு மாற்றப்படுகிறது. இதற்குப் பிறகு, மோசடி செய்பவர்கள் மறைந்து விடுகிறார்கள். இதன் மூலம் மோசடி குறித்த தகவல்கள் பெறப்படுகின்றன.
Aadhar உடன் போலி சிம் லிங்க் செய்யப்பட்டுள்ளதை எப்படி தெரிந்து கொள்வது?
உங்கள் ஆதருடன் போலி சிம் லிங்க் செய்யப்பட்டுள்ளது என்று கூறினால்,, நீங்கள் உடனே பயப்பட வேண்டாம் ஏனென்றால் இதை பற்றி தெரிந்து கொள்ள அரசு ஆன்லைன் நன்மை வழங்குகிறது, இதன் உதவியால் பயனர்கள் வீட்டிலிருந்தபடி ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம். உங்களின் சிம் கார்ட் வேறு எதாவது போலி சிம்மில் லிங்க் செய்யப்பட்டிருந்தால் நீங்கள் எளிதாக புகரளிக்கலம்.
அரசு சஞ்சார் சாத்தி போர்ட்டல்
டெலிகாம் துறையின் சஞ்சார் சதி போர்ட்டலில் இருந்து, அதாவது DoT மூலம், உங்கள் ஆதார் கார்டில் வழங்கப்பட்ட சிம் கார்டு மற்றும் உங்கள் ஆதாருடன் எத்தனை, எந்தெந்த சிம்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறியலாம்.
இதற்கு, முதலில் நீங்கள் சஞ்சார் சாத்தி போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும் https://www.sancharsaathi.gov.in/.
இதற்குப் பிறகு, சிட்டிசன் சென்ட்ரிக் சர்வீஸ் பிரிவில் பல விருப்பங்களைக் காண்பீர்கள்.
இதில் நீங்கள் Know Your Mobile Connections (TAFCOP) ஆப்சனில் லிங்க் செய்யலாம்.
பிறகு 10 டிஜிட் மொபைல் எண் மற்றும் கேப்ட்சா கோடை உள்ளிட வேண்டும்.
உங்கள் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு 6 டிஜிட் OTP அனுப்பப்படும், அதைச் சரிபார்க்க உள்ளிட வேண்டும், பின்னர் லோகின் விருப்பத்தைத் தட்டவும்.
அதன் பிறகு ஒரு புதிய பக்கம் திறக்கும், அதில் உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரின் விவரங்கள் இருக்கும்.
இங்கு உங்களுக்கு மூன்று ஆப்சன் தெரியும் இதில் Not My Number யில் க்ளிக் செய்து போலியான மொபைல் நம்பர் மீது புகார் அளிக்கலாம். அதன் பிறகு உங்கள் ஆதாருடன் லிங்க் செய்யப்பட்ட சிம் கார்டு உடன் டிஎக்டிவ் செய்யலாம்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.